வாடகை கேட்கும் ஓனர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை! டி.ஜ.ஜி. அதிரடி!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாடகை தர இயலாமல் ஊரைவிட்டு வெளியேறிய பொதுமக்களுக்கு அரசாங்கமே வாடகையை செலுத்தும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழகத்தை பொறுத்தவரை இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க வீட்டு வாடகை பிரச்சனை கருத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். இந்நிலையில், திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள்,
 

வாடகை கேட்கும் ஓனர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை! டி.ஜ.ஜி. அதிரடி!நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாடகை தர இயலாமல் ஊரைவிட்டு வெளியேறிய பொதுமக்களுக்கு அரசாங்கமே வாடகையை செலுத்தும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க வீட்டு வாடகை பிரச்சனை கருத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தமிழக மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் என யாரையும் வீட்டினை காலி செய்ய நிர்பந்திக்கக் கூடாது. ஒரு மாத வாடகை கேட்கக்கூடாது.

புகார்கள் நிருபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல காவல்துறை துணை தலைவர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி – 0431 -2333638,
கரூர் – 04324 – 255100
புதுக்கோட்டை – 04322 – 266966
அரியலூர் – 0439 – 222216
பெரம்பலூர் – 04328 – 224962

என மாவட்டம் வாரியாக புகார் தர வேண்டிய தொலைபேசி எண்களையும் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web