குழந்தைகளுக்கு நல்லது சொல்லித் தரக்கூட யாருமில்லை! – லதா ரஜினிகாந்த்

சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பீஸ் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற லதா ரஜினிகாந்த், “இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமூகத்தில் அனைவரும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். கூட்டுக் குடும்பங்கள் தற்போது குறைந்து விட்டதால், குழந்தைகளுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லாமல் வளரும் சூழல் உள்ளது. முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருந்தது,
 

சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பீஸ் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் பங்கேற்ற லதா ரஜினிகாந்த், “இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் தொடந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சமூகத்தில் அனைவரும் குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். கூட்டுக் குடும்பங்கள் தற்போது குறைந்து விட்டதால், குழந்தைகளுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லாமல் வளரும் சூழல் உள்ளது.

முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருந்தது, குழந்தைகளை பெரியவர்கள் கண்காணித்து கொண்டே இருந்தார்கள். செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டனர்,” என கூறினார்.

– வணக்கம் இந்தியா

From around the web