தர்பார் படப்பிடிப்பில் லதா ரஜினிகாந்த்!

மும்பை: தர்பார் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. லதா ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிக்காக படக்குழுவுடன் ரஜினியும் நயன் தாராவும் லண்டன் செல்ல இருப்பதாகவும் அங்கு படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் தர்பார் படப்பிடிப்பு நடபெறும் தளத்திற்கு லதா ரஜினிகாந்த் சென்று பார்வையிட்டுள்ளார். 80 களில் ஒரே
 

தர்பார் படப்பிடிப்பில் லதா ரஜினிகாந்த்!

மும்பை: தர்பார் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. லதா ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிக்காக  படக்குழுவுடன் ரஜினியும் நயன் தாராவும் லண்டன் செல்ல இருப்பதாகவும் அங்கு படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பையில் தர்பார் படப்பிடிப்பு நடபெறும் தளத்திற்கு லதா ரஜினிகாந்த் சென்று பார்வையிட்டுள்ளார். 80 களில் ஒரே நேரத்தில் பல படங்களில் ரஜினி நடித்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் படப்பிடிப்புகள் சென்னையிலேயே இருக்கும். அப்போதெல்லாம் மதிய உணவை படப்பிடிப்பு தளத்திற்கே லதா ரஜினிகாந்த் எடுத்துச் செல்வது வழக்கம்.

கணவருக்கு மட்டுமல்லாமல், படத்தின் யூனிட்டுக்கும் சேர்த்தே உணவு கொண்டு செல்வார் ரஜினிகாந்த். எல்லோரும் சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவது வழக்கம். லதா ரஜினிகாந்த் சமைத்த உணவு பற்றியெல்லாம், ரஜினியுடன் நடித்த பிரபலங்கள், இயக்குனர்கள், டெக்னீஷியன்கள் பெருமையாக கூறுவது உண்டு.

பின்னாட்களில் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதை லதா ரஜினிகாந்த் குறைத்துக் கொண்டார். ஆனால் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் வீட்டிலிருந்தே உணவுகொண்டு செல்லும் வழக்கம் தொடர்கிறது.

மும்பை படப்பிடிப்பில் போலீஸ் அதிகாரி உடையுடன் ரஜினியும் உடன் லதா ரஜினிகாந்தும் இருக்கும் படம் வெளியாகியுள்ளது. மும்பையிலிருந்தே ரஜினியுடன் லண்டன் செல்வதற்காக மும்பை சென்றுள்ளாரா லதா ரஜினிகாந்த் என்று தெரியவில்லை!

– வணக்கம் இந்தியா

 

From around the web