சென்னையில் தீர்ந்தது தண்ணீர் பஞ்சம்?

சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான பூண்டி ஏரியில் 783 மில்லியன் கன அடி நீர் தற்போது இருப்பு உள்ளதால் – ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர் வந்து சேர்ந்துள்ளது.
 

சென்னையில் தீர்ந்தது தண்ணீர் பஞ்சம்?சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான பூண்டி ஏரியில் 783 மில்லியன் கன அடி நீர் தற்போது இருப்பு உள்ளதால் – ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர் வந்து சேர்ந்துள்ளது. விரைவில் இந்த நீர் புழல் ஏரிக்கு பிரித்து அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய எரிகளின் மொத்த இருப்பு 899 மில்லியன் கன அடியாக உள்ளது.

பருவ மழையும் நெருங்கி வரும் சூழலில், சென்னை எரிகளில் உள்ள இருப்பு சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானது என்பதால் ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவிய ஜூலை 12ம் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக குடிநீர் கொண்டுவரும் திட்டம் முதல் முறையாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– வணக்கம் இந்தியா

From around the web