அதிர்ச்சி! கடவுளின் தேசத்தில் இனி அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும்!

கேரளாவில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் மணலுக்கு அடியில் சிக்கி பலியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில், மூணாறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக அந்தப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது. இந்நிலையில், நேற்று இரவு வேளை பெட்டிமுறி என்ற இடத்தில் தொழிலாளர்கள் வசித்து வந்த 20 குடியிறுப்புகள் மண்ணில் புதைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பதற்குள்
 

அதிர்ச்சி! கடவுளின் தேசத்தில் இனி அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும்!

கேரளாவில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் மணலுக்கு அடியில் சிக்கி பலியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில், மூணாறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக அந்தப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.

இந்நிலையில், நேற்று இரவு வேளை பெட்டிமுறி என்ற இடத்தில் தொழிலாளர்கள் வசித்து வந்த 20 குடியிறுப்புகள் மண்ணில் புதைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக அங்கு சென்று மீட்பதற்குள் 17 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட மக்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலச்சரிவு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறுகையில், ‘நிலச்சரிவுகளுக்கு எதிரான தாங்கும் சக்தியை கேரள மண் இழந்துவிட்டது என்றும், இனிமேல் இப்படிப்பட்ட நிலச்சரிவுகள் அடிக்கடி கேரளாவில் நிகழும் என்று காலநிலை விஞ்ஞானியும், நீரியல் புவியலாளருமான ஹரிதாஸ் தெரிவித்துள்ளதாக கவலைத் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web