லஷ்மி விமர்சனம்

நடிகர்கள்: பிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி தித்யா, சல்மான் யூசுஃப்கான் ஒளிப்பதிவு: நீரவ் ஷா இசை: சாம் சிஎஸ் தயாரிப்பு: ப்ரமோத் பிலிம்ஸ், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் இயக்கம்: விஜய் விஜய் இயக்கும் படங்களில் எப்போதுமே செயற்கைத்தனம், இயல்பை மீறிய கற்பனைகள் அதிகம். அதாவது கற்பனை என்றால் பிரமிக்க வைக்கிற கற்பனைகள் அல்ல… அடச்சே.. இப்படியெல்லாமா யோசிப்பாங்க என கடுப்பேத்த வைக்கிற கற்பனைகள். நேற்று வெளியான லஷ்மி படமும்
 
டிகர்கள்: பிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி தித்யா, சல்மான் யூசுஃப்கான்
 
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
 
இசை: சாம் சிஎஸ்
 
தயாரிப்பு: ப்ரமோத் பிலிம்ஸ், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்
 
இயக்கம்: விஜய்
 
விஜய் இயக்கும் படங்களில் எப்போதுமே செயற்கைத்தனம், இயல்பை மீறிய கற்பனைகள் அதிகம். அதாவது கற்பனை என்றால் பிரமிக்க வைக்கிற கற்பனைகள் அல்ல… அடச்சே.. இப்படியெல்லாமா யோசிப்பாங்க என கடுப்பேத்த வைக்கிற கற்பனைகள்.
 
நேற்று வெளியான லஷ்மி படமும் அதற்கு விலக்கல்ல.
 
கிட்டத்தட்ட ஷாரூக்கானின் சக்தே இந்தியா மாதிரி ஒரு ஒன்லைனை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேர டான்ஸ் ஷோவை ஒப்பேற்றியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது விஜய் எடுத்த படமா அல்லது விஜய் டிவிக்காக எடுக்கப்பட்ட ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ மாதிரி ஷோவா என்ற கேள்வி பலமாகவே எழுகிறது. 
 
சிறுமி லஷ்மிக்கு டான்ஸ் என்றால் உயிர். ஆனால் அவள் அம்மா ஐஸ்வர்யாவோ டான்ஸ் என்றாலே அப்படி வெறுக்கிறார். அகில இந்திய அளவில் ஒரு டான்ஸ் போட்டி அறிவிக்கப்படுகிறது. அதில் கலந்து கொள்ள அம்மாவுக்குத் தெரியாமல், பிரபுதேவா உதவியுடன் டான்ஸ் க்ளாஸ் சேர்கிறாள் லஷ்மி. நன்றாக நடனம் தெரிந்திருந்தாலும், மேடை பயம் காரணமாக சொதப்புகிறாள் லஷ்மி. நடனக்குழுவிலேயே சேர்க்க மறுக்கிறார்கள். அப்போதுதான் துணைக்கு வருகிறார் பிரபு தேவா. அவரைப் பார்த்ததும் நடனக்குழு, நடன குரு அனைவரும் மிரண்டுபோய் வணக்கம் வைக்கிறார்கள். 
லஷ்மி விமர்சனம்
பிரபுதேவா யார், லஷ்மிக்கும் அவருக்கும் என்ன உறவு, லஷ்மி வென்றாளா? என்பதெல்லாம் மீதிக்கதை. விருப்பமிருந்தால் திரையில் போய்ப் பார்க்கலாம் ரகக் காட்சிகள். 
 
பிரபுதேவாவுக்கு நடனம் தொடர்பான வேடம். பெரிதாக உணர்ச்சிகளைக் காட்டத் தேவையில்லை என்பதால், நடனத்தில் பின்னி எடுத்திருக்கிறார்.
 
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வேலை ஒன்றுமில்லை. நடன ஆசிரியையாக வரும் சோஃபியா எப்போதும் முறைத்தபடி கடுப்பேற்றுகிறார். அந்த யூசுப்கானின் நடனம் அசத்தல். 
 
கதையின் மையப் பாத்திரம் லஷ்மிதான். ஆரம்ப காட்சிகளில் அநாயாசமாக நடனமாடி கலக்குகிறார். ஆனால் டான்ஸ் போட்டியின் ஆரம்ப சுற்றுகளில் சோபிக்காவிட்டாலும், அந்த க்ளைமாக்ஸ் நடனத்தில் கவர்கிறார்.
 
கருணாகரன் இருக்கிறார். ஆனால் காமெடி சுத்தமாக இல்லை. 
 
சாம் சிஎஸ் இசையில் ஒரு பாடல் பரவாயில்லை. நீரவ்ஷா ஒளிப்பதிவு. பெரும்பாலான காட்சிகள் மேடையிலேயே என்பதால் அவருக்கும் பெரிதாக வேலை இல்லை. 
 
தொடர்ந்து ஒரே மாதிரியான காட்சிகள், நடன சுற்றுகள்… நடனமாடும்போது மேடையில் குத்தூசியைப் பரப்பி வைக்கும் வில்லத்தனம், அதிலேயே ஆவேசமாக நடனமாடுவதாகக் காட்டும் நாடகத்தனம்… இதெல்லாம் இயக்குநர் விஜய்க்கு போரடிக்காவிட்டாலும், பார்ப்பவர்கள் பாவமில்லையா?
 
Rating: 2.5/5.0
 
– வணக்கம் இந்தியா

From around the web