அமெரிக்காவின் எட்டுத் திக்கிலிருந்தும் குழந்தைகள் பங்கேற்ற  ‘குறள் தேனீ’… அசந்து பாராட்டிய ஜேம்ஸ் வசந்தன்!

டல்லாஸ் : அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலில் நடைபெற்ற ‘குறள் தேனீ’ போட்டி மூலம் 30 ஆயிரம் தடவைகள் திருக்குறள் ஓதப்பட்டுள்ளது. விழா அரங்கத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அமெரிக்காவில் கடந்த 12 ஆண்டுகளாக சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் ‘ஒரு குறள் ஒரு டாலர்’ திருக்குறள் போட்டிகள் நடந்து வருவது அறிந்ததே!. ஆண்டு தோறும் நடைபெறும் ஃபெட்னா விழாவில், சற்று மாறுதலுடன், ‘குறள் தேனீ’ என்ற
 
அமெரிக்காவின் எட்டுத் திக்கிலிருந்தும் குழந்தைகள் பங்கேற்ற  ‘குறள் தேனீ’… அசந்து பாராட்டிய ஜேம்ஸ் வசந்தன்!
டல்லாஸ் : அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலில் நடைபெற்ற  ‘குறள் தேனீ’  போட்டி மூலம் 30 ஆயிரம் தடவைகள் திருக்குறள் ஓதப்பட்டுள்ளது. விழா அரங்கத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 
 
அமெரிக்காவில் கடந்த 12 ஆண்டுகளாக சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில்  ‘ஒரு குறள் ஒரு டாலர்’ திருக்குறள் போட்டிகள்  நடந்து வருவது அறிந்ததே!. ஆண்டு தோறும் நடைபெறும்  ஃபெட்னா விழாவில், சற்று மாறுதலுடன், ‘குறள் தேனீ’ என்ற வடிவத்தில் திருக்குறள் போட்டிகள் நடத்தப் படுகிறது.
 
முதல் கட்டமாக, அமெரிக்கா முழுவதும் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் மொத்தம் 30 ஆயிரம் தடவைகள் திருக்குறள்களை ஒதினார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள்  ‘ஃபெட்னா தூதுவர்கள் (FeTNA Ambassadors) ’ ஆக கவுரவிக்கப் பட்டார்கள்
 
ஃபெட்னா 2018 தமிழ் விழாவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ‘குறள் தேனீ’ போட்டியில்  மூன்று நிலைகளில், பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.  முதல் இரண்டு சுற்றுகள் தனியே உள்ள அரங்கத்திலும் மூன்றாவது சுற்று விழாவின் முக்கிய அரங்கத்திலும் நடைபெற்றது. ஜேம்ஸ் வசந்தன் இறுதிச் சுற்றுப் போட்டியை நடத்தினார்.
 
போட்டியாளர்களின் திருக்குறள் திறனைப் பார்த்த இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அசந்து போய்விட்டார்.ஒவ்வொரு குழந்தையிடமும் பத்து கேள்விகள் கேட்டார். அனைவருமே அனைத்து கேள்விகளுக்கான பதில்களை ஒரு நிமிடத்திற்குள் சொல்லி அசத்தினார்கள்.
 
அமெரிக்காவில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளின் தமிழ்ப் பேச்சு, சொல்லாற்றல் மற்றும் திருக்குறள் திறன் தன்னை வியக்க வைத்ததாக ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டார். அமெரிக்காவில் பலதரப்பட்ட சவால்களுக்கு இடையே தமிழ் மொழியை இந்தக் குழந்தைகள் கற்றுள்ளார்கள் என்றால், தமிழகத்தில் தமிழுக்காக செய்யவேண்டிய கடமைகள் ஏராளம் இருக்கிறது என்று உணர்ச்சி வசப்பட்டார்.
அமெரிக்காவின் எட்டுத் திக்கிலிருந்தும் குழந்தைகள் பங்கேற்ற  ‘குறள் தேனீ’… அசந்து பாராட்டிய ஜேம்ஸ் வசந்தன்!
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற ’குறள் தேனீ’க்கள் விவரம் வருமாறு:
 
ராமநாதன் கணேசன், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் அகடமி, ஃப்ளவர் மவுண்ட் 
சாய் ஹர்ஷன் சந்தோஷ் , ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி, ஆஸ்டின் நித்திலன் மாநிதி , கோப்பல் தமிழ்க் கல்வி மையம் , கோப்பல் அவந்திகா கே சந்திரன் , லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகர தமிழ்ப் பள்ளி, லாஸ் ஏஞ்சல்ஸ் ரூப்பேஷ் தினகரன் , கோப்பல் தமிழ்க் கல்வி மையம் , கோப்பல் நிகழ்ச்சியை விசாலாட்சி வேலு ஒருங்கிணைத்தார். பழநிசாமி மற்றும் கீதா அருணாச்சலம் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தார்கள். மதிப்பெண்கள் பணியை கவிதா செய்தார். 
 
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை நிறுவனர்  ‘திருக்குறள் புரவலர்’ டாக்டர் ராம்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 1330 குறள்களையும் முழுமையாக கற்றறிந்த அமெரிக்காவின் 8 குறளரசிகள், குறளரசர், குறள் இளவரசிகளுக்கு டாக்டர்.ராம் மோகன் கவுரவித்து சிறப்பு செய்தார்.
 
இவர்கள் உட்பட அமெரிக்க அளவிலான  ‘குறள் தேனீ’  போட்டி வெற்றியாளர்கள் அனைவரும்  ‘ஃபெட்னா தூதுவர்கள் (FeTNA Ambassadors) ’ ஆக அறிவிக்கப் பட்டார்கள்.
‘குறள் தேனீ’ க்கான ஏற்பாடுகள், ஒருங்கிணைப்பை வேலு ராமன், விசாலாட்சி வேலு, ராதிகா, கார்த்திகேயன், செந்தில் செல்வன், ஈஸ்வரி பாண்டியன்  உள்ளிட்டோர் கொண்ட குழு செய்திருந்தார்கள்.
 
அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ க்கும் அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
 
– வணக்கம் இந்தியா
படங்கள் : Your SureShot Photography

From around the web