இலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து – தனித்து ஒலிக்கும் குமார் சங்கக்கராவின் குரல்

தென்னிலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை பரவி வருகிறது. கிருஸ்த்துவ தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கான எதிர் வன்முறையை நிகழ்த்துவது பவுத்த பேரினவாதிகள் என்பதுதான் இங்கே நகைமுரண். சில மாதங்கள் முன் இலங்கையில் பரவிவரும் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியல் போக்குகளால் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களிடையே கூர்மைபெறும் பிளவு மனப்பான்மை பற்றி நான் இதே பக்கத்தில் எழுதிய பதிவுகளுக்காக இஸ்லாமிய விரோதி, ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல், உள்ளிட்ட பட்டங்களை பெற்றேன். ஆனால் அஞ்சியபடியே வகாபியிச சிந்தனைகள் வழியே ஏற்கனவே பொதுச்சமூகத்தின் விலக்கத்தை
 

இலங்கையில் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து – தனித்து ஒலிக்கும் குமார் சங்கக்கராவின் குரல்

தென்னிலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை பரவி வருகிறது. கிருஸ்த்துவ தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கான எதிர் வன்முறையை நிகழ்த்துவது பவுத்த பேரினவாதிகள் என்பதுதான் இங்கே நகைமுரண்.

சில மாதங்கள் முன் இலங்கையில் பரவிவரும் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியல் போக்குகளால் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களிடையே கூர்மைபெறும் பிளவு மனப்பான்மை பற்றி நான் இதே பக்கத்தில் எழுதிய பதிவுகளுக்காக இஸ்லாமிய விரோதி, ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல், உள்ளிட்ட பட்டங்களை பெற்றேன்.

ஆனால் அஞ்சியபடியே வகாபியிச சிந்தனைகள் வழியே ஏற்கனவே பொதுச்சமூகத்தின் விலக்கத்தை அடைந்த இலங்கை இஸ்லாமிய சமூகம் இன்று முட்டுச்சந்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பல்பண்பாட்டுச் சூழலுக்குள் பொருந்தி வாழ்ந்த இயல்பான வாழ்வியல் சூழலை சிதைத்த வகாபிகள் இன்றும் தங்கள் சொல்லாடல்கள் வழியே எண்ணற்ற எளிய சாமானிய இஸ்லாமியர்களை அன்றாட வாழ்க்கைகுறித்த அச்சத்தில் சிக்க வைத்திருக்கிறார்கள்..

இலங்கையின் தற்போதைய பொதுப்புத்தி இஸ்லாமிய வெறுப்பில் கனன்று கொண்டுள்ளது. இதில் சிங்கள பவுத்தர்கள், தமிழ் இந்துக்கள், மற்றும் கிருஸ்த்துவர்கள் அனைத்து சமூகங்களும் சொல்லிவைத்தாற்போன்ற பொதுவான வெறுப்பு உளவியலில் இயங்குகின்றன. ஆங்காங்கு எழும் நல்லிணக்கத்தின் குரல்களைகாட்டிலும் வலுவாகவும் அச்சமூட்டக்கூடியதாகவும் இருக்கிறது இந்த வெறுப்பின் மவுனம்.. தங்களின் ஏகபோக கருத்தியல் வழிகாட்டிகளாக வகாபிகளை அனுமதித்ததன் விலை இது..

தன்மதநம்பிக்கை பிறமதவெறுப்பாகவே உருக்கொள்ள வேண்டும் என நினைக்கும் எல்லோர்க்குமான எச்சரிக்கை மணி இது.
அபூர்வமாக ஒரு குரல் இந்த வன்முறைக்கெதிராக நம்பிக்கையை நல்லிணக்கத்தை சகவாழ்வை எதிர்காலத்தை உரக்கப்பேசுகிறது.. தன்னந்தனியே எதிர்மறையாக நுரைத்து கிளம்பும்பொது உளவியலுடன் மோதுகிறது.. அது மானுட அறத்தை பேசுகிறது.

அந்தக்குரல் ஒரு விளையாட்டு வீரனாகவும் என் பெருமதிப்பை பெற்றவனான குமார் சங்கக்கராவினுடையது.

– முருகானந்தம் ராமசாமி

From around the web