குபேர லக்ஷ்மி பூஜை… மங்காத செல்வம் எப்போதும் வீட்டில்!

வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்திருக்கவும், குபேரன் மற்றும் மகாலட்சுமியின் அருளையும் பெறவும் வீட்டிலேயே எளிமையான முறையில் குபேர லட்சுமி பூஜை செய்யலாம். இந்த பூஜையைத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் அல்லது ஒன்பது மாதங்கள் ஒரே நாட்களில் செய்ய வேண்டும். அதாவது ஒன்பது வாரங்கள் எனில் வாரா வாரம் வெள்ளிக் கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்பது மாதங்கள் எனில் மாதா மாதம் வரும் பவுர்ணமி,அமாவாசை என ஏதாவது ஒரு நாளில் செய்யலாம். இப்பூஜை செய்வதற்கு ஆண், பெண் பாகுபாடு
 

குபேர லக்ஷ்மி பூஜை… மங்காத செல்வம்  எப்போதும் வீட்டில்!

வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்திருக்கவும், குபேரன் மற்றும் மகாலட்சுமியின் அருளையும் பெறவும் வீட்டிலேயே எளிமையான முறையில் குபேர லட்சுமி பூஜை செய்யலாம்.

இந்த பூஜையைத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் அல்லது ஒன்பது மாதங்கள் ஒரே நாட்களில் செய்ய வேண்டும். அதாவது ஒன்பது வாரங்கள் எனில் வாரா வாரம் வெள்ளிக் கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ஒன்பது மாதங்கள் எனில் மாதா மாதம் வரும் பவுர்ணமி,அமாவாசை என ஏதாவது ஒரு நாளில் செய்யலாம். இப்பூஜை செய்வதற்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது. யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் பூஜையைத் துவங்கியவராலேயே ஒன்பது தினங்கள் நடத்தப்பட வேண்டும். உடல்நலக் குறைவு ஏற்படும் காலங்களில் குடும்பத்தில் வேறொருவர் செய்யலாம்.
பூஜையைத் தொடங்குவதற்கு முன் ஒரே மாதிரியான 81 நாணயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.அது ஒரு ரூபாய் அல்லது ஒரே மதிப்புடைய 81 நாணயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூஜை செய்யத் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட நாளில், அதிகாலையில் குளித்து , நீராடி, அவரவர் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதில் நிறுத்தி தீபம் ஏற்ற வேண்டும். ஒன்பது வாரமும் பூஜையை நிறைவு செய்து, செல்வம் நிலைபெற்றிட முதலில் முழுமுதற்கடவுளான பிள்ளையாரை பிரார்த்திக்க வேண்டும்.

வீட்டு பூஜையறையில் மனைப் பலகையின் மேல் ,படத்தில் தரப்பட்டிருக்கும் மாதிரியைப் பார்த்து குபேர யந்திர கோலத்தில் இருக்கும் கட்டத்தை குங்குமத்தால் வரைந்து கொள்ள வேண்டும். அதற்குள் எண்கள் அரிசி மாவால் எழுதப்பட வேண்டும் .“ஸ்ரீ’ என்ற எழுத்தை மஞ்சள் பொடியால் எழுத வேண்டும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு நாணயம் வைக்கப்பட வேண்டும். எண்களை மறைக்காமல் நாணயங்களை வைக்கும் அளவிற்கு கட்டங்கள் வரையப்பட்டிருக்க வேண்டும். குபேர யந்திரத்தில் நாணயமான மகாலட்சுமி எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.

இந்த லட்சுமி குபேர யந்திரத்தை பூஜிக்க கொஞ்சம் உதிரி பூக்களை மட்டுமே போதுமானவை.யந்திரத்தின் முன்னால் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றப்பட வேண்டும்.

“தாயே மகாலட்சுமி, எங்கள் வீட்டில் அனைத்து மங்களங்களும் பெருகி , மங்காத செல்வங்கள் நிலைபெற்றிருக்க உன்னருளைத் தர வேண்டும்” எனப் பொருள் படும் விதமாக முதலில் மகாலட்சுமி துதி:
மகாலட்சுமியே போற்றி!
மங்கள லட்சுமியே போற்றி!
தீபலட்சுமியே போற்றி!
திருமகள் தாயே போற்றி!
அன்னலட்சுமியே போற்றி!
கிருக லட்சுமியே போற்றி!
நாரண லட்சுமியே போற்றி!
நாயகி லட்சுமியே போற்றி!
ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி! என்று சொல்லிக்கொண்டே பூக்களை லட்சுமி குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.
இதை அடுத்து குபேர துதி :
வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!

என்று குபேரனை வணங்கி முடித்தவுடன் சர்க்கரை கலந்த பால் அல்லது பால் பாயசத்தை நைவேத்தியமாக வீட்டிலேயே தயார் செய்து வைக்க வேண்டும். தூப, தீபங்கள் காட்டி கற்பூர ஆரத்தியுடன் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை செய்த நாளில் பெருமாள் கோயிலில் இருக்கும் தாயாரை தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள், குபேர யந்திரத்தில் வைத்து பூஜித்த காசுகளை எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.ஈரமான துணியால் கோலத்தை அழித்து விட வேண்டும்.

அடுத்த வரும் ஒவ்வொரு வாரமும் இதே முறையைப் பின்பற்றி பூஜையை தொடர வேண்டும். ஒன்பது வார முடிவில் பத்திரப்படுத்திய நாணயங்களை அருகில் இருக்கும்
சிவன் சன்னதியில் இருக்கும் உண்டியல் அல்லது பெருமாள் கோயில் தாயார் சன்னதியில் உள்ள உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

அத்தோடு முடிந்த அளவு மங்கலப் பொருட்களை கோவிலில் தர வேண்டும். அதைப் பெற்றுக் கொள்ள மகாலட்சுமியே நம்மை நாடி வருவாள் என்பது நம்பிக்கை . ஒன்பது வார பூஜை முடிந்த நாளிலிருந்தே செல்வம் வளம் சேர்வதை கண் கூடாகக் காண முடியும்.

அந்தச் செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஆன்மீக அன்பர்களின் கருத்து.

https://www.A1TamilNews.com

From around the web