தோணியின் சாதனையை முறியடித்த கோஹ்லி!

கிங்ஸ்டன்(ஜமைக்கா): மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றி மூலம் தோணியின் சாதனையை முறியடித்துள்ளார் கோஹ்லி. ஜமைக்காவில் நடைபெற்ற இரண்டு மேட்ச் சீரிஸின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்திய அணி 257 ரன் வித்தியாசத்தில் இந்த மேட்சில் வெற்றி பெற்றுள்ளது. 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களுடன் நான்காவது நாள் ஆட்டத்தை மேற்கந்திய தீவுகள் அணி தொடங்கியது. ரோஸ்டன் சேஸும் ஷமர் ப்ரூக்கும் இணைந்து 45 ரன்கள் எடுத்த நிலையில் ரவிந்திர ஜடேஜாவிடம்
 

கிங்ஸ்டன்(ஜமைக்கா): மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றி மூலம்  தோணியின் சாதனையை முறியடித்துள்ளார் கோஹ்லி.

ஜமைக்காவில் நடைபெற்ற இரண்டு மேட்ச் சீரிஸின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்திய அணி 257 ரன் வித்தியாசத்தில் இந்த மேட்சில் வெற்றி பெற்றுள்ளது.

2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களுடன் நான்காவது நாள் ஆட்டத்தை மேற்கந்திய தீவுகள் அணி தொடங்கியது. ரோஸ்டன் சேஸும் ஷமர் ப்ரூக்கும் இணைந்து 45 ரன்கள்  எடுத்த நிலையில் ரவிந்திர ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்தார் சேஸ்.

ஷிம்ரோன் ஹெட்மயர் இஷாந்த் சர்மாவிடம் விக்கெட்டை பறிகொடுத்த போது மேற்கிந்திய தீவுகள் அணி 98 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்கள்.  மதிய உணவு இடைவேளையின் போது 145 ரன்களுடன் ப்ரூக்கும் ப்ளாக்வுட்டும் களத்தில் இருந்தார்கள். இருவருடைய கூட்டணி 61 ரன்களை எடுத்தது.

ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துக்கு ஆடிய ப்ளாக்வுட்,  விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்-டிடம் பிடிபட்டார். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்திய தீவின் கடைசி ஆட்டக்காரரான ஹோல்டர் விக்கெட்டை ஜடேஜா எடுத்தார். 210 ரன்கள் எடுத்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா 257 ரன்களி வென்றது.

இந்த வெற்றி அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் 28 வது டெஸ்ட் வெற்றியாகும். 48 போட்டிகளில் 28 வெற்றிகளைப் பெற்றுள்ளார் கேப்டன் விராட் கோஹ்லி. இதன் மூலம் 60 போட்டிகளில் 27 வெற்றிகளைப் பெற்ற எம்.எஸ். தோணியின் சாதனையை முறியடித்துள்ளார் கோஹ்லி.

– வணக்கம் இந்தியா

From around the web