பெரியவர் மருமகனுக்கு சூப்பர் ஒன் மருமகன் உதவியா?

வருசப்பிறப்பு அதுவுமா, சூப்பர் ஒன் மருமகன் இரண்டு படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியிருக்காரு. மகள்-மருமகன் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் கூடியிருக்க, அரசியலிலும் சினிமாவிலும் மூத்த பெரியவர் மருமகன் கம்பெனிக்காக அட்வான்ஸ் கொடுத்துள்ளார். ஒரே நேரத்திலே ஒரு படத்துக்கு மேலே அட்வான்ஸ் வாங்கினது இந்தியாவின் சூப்பர் ஒன்னான உச்ச நட்சத்திரம் மட்டும் தான். 80 களில் கோடம்பாக்கத்தின் மூணு எழுத்து நிறுவனத்திற்கு பேக் டூ பேக் மூணு படத்திலே நடிக்க ஒத்துக் கொண்டார். அந்தப் பணத்திலே தான் மண்டபம் கட்டப்பட்டதாக
 
பெரியவர் மருமகனுக்கு சூப்பர் ஒன் மருமகன் உதவியா?
ருசப்பிறப்பு அதுவுமா, சூப்பர் ஒன் மருமகன் இரண்டு படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியிருக்காரு.  மகள்-மருமகன் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் கூடியிருக்க, அரசியலிலும் சினிமாவிலும் மூத்த பெரியவர் மருமகன் கம்பெனிக்காக அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.
 
ஒரே நேரத்திலே ஒரு படத்துக்கு மேலே அட்வான்ஸ் வாங்கினது இந்தியாவின்  சூப்பர் ஒன்னான உச்ச நட்சத்திரம் மட்டும் தான். 80 களில் கோடம்பாக்கத்தின் மூணு எழுத்து நிறுவனத்திற்கு பேக் டூ பேக் மூணு படத்திலே நடிக்க ஒத்துக் கொண்டார். அந்தப் பணத்திலே தான் மண்டபம் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டதுண்டு.
 
அதே பாணியில் மருமகனும் பேக் டூ பேக் 2 படத்துக்கு அட்வான்ஸ் வாங்கியிருக்காருன்னா அது சூப்பர் மாமனாரின் யோசனை தான்னு கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. 
 
பெரியவர் மீது பெரு மதிப்பும் மரியாதையும் கொண்டவர் உச்ச நட்சத்திரம். பெரியவரின் பழைய பிரபல நிறுவனம் மீண்டும் தயாரிப்புக்கு வராவிட்டாலும், மருமகன் கம்பெனியை வளர்க்க ஆசைப்படுகிறார். ஒன்னு போனால் என்ன, விசுவாசமாக இன்னொன்னு எடுங்கன்னு அல்டிமேட் நடிகர் நடித்த படம் தள்ளி தள்ளிப் போய் பொங்கலுக்கு வருகிறது.
 
அதுக்குள்ளே விறுவிறுன்னு சுறுசுறுப்பா ரெடியாகி, உச்ச நட்சத்திரம் படமும் வந்துட்டதாலே தியேட்டர்காரங்க பதறுறாங்க. பெரியவர் மருமகன் கம்பெனிக்கு மீண்டும் நட்டம் ஏற்பட்டு விடுமோ என யோசித்து, தன்னுடைய மருமகனை அனுப்பி வைத்துள்ளாராம் சூப்பர் ஒன். மாமனார் வழியில் மருமகனும் பேக் டூ பேக் 2 படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிட்டாராம்
 
– குவாட்டர் கோவாலு

From around the web