கொரோனா குறித்து அரசு கையேட்டில் அறிவிக்கப்பட்டிக்கும் முக்கிய அம்சங்கள்!

கொரோனா வைரசின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், சளி, மூச்சுத்திணறல், உடல்சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கடைப்பு, இருமல் மற்றும் தும்மல். ஒருவருக்கு ஆரம்பிக்கும் கொரோனா ஒரே மாதத்தில் 40 பேர் வரை பரவ வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும். இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் மூடி கொள்ளவேண்டும். அடிக்கடி கண், மூக்கு, வாய் தொடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டை
 

கொரோனா குறித்து அரசு கையேட்டில் அறிவிக்கப்பட்டிக்கும் முக்கிய அம்சங்கள்!கொரோனா வைரசின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், சளி, மூச்சுத்திணறல், உடல்சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கடைப்பு, இருமல் மற்றும் தும்மல். ஒருவருக்கு ஆரம்பிக்கும் கொரோனா ஒரே மாதத்தில் 40 பேர் வரை பரவ வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும். இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் மூடி கொள்ளவேண்டும். அடிக்கடி கண், மூக்கு, வாய் தொடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டை விட்டு பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினசரி நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவில் நிறைய பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி பால், மோர், இளநீர் குடிக்க வேண்டும்.

தினமும் சூடான பாலில் மஞ்சள்தூள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். தினமும் 15முதல் 20 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் நிற்க வேண்டும். கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும்.

லேசாக இருமல், சளி இருப்போர் சுக்கு, திப்பிலி, ஆடதோடா போன்ற 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீரைக் குடிக்கலாம். சர்க்கரை மற்றும் மற்ற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் ,வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பது நலம் பயக்கும்.

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் அடங்கிய கையேட்டை வீடு வீடாக விநியோகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

A1TamilNews.com

From around the web