லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ கேரள உயர் நீதிமன்றம் அனுமதி!

திருவனந்தபுரம்: கேரள உயர் நீதிமன்றத்தில் கொல்லத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா (40) என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நெய்யாட்டின்கராவைச் சேர்ந்த அருணா (24) என்பவரை அவரது பெற்றோர் பிரித்து சென்று வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்து இருப்பதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து அருணாவை காவல்துறையினர் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஸ்ரீஜாவுடன் சேர்ந்து வாழவே தாம் விரும்புவதாக அருணா
 

லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ கேரள உயர் நீதிமன்றம் அனுமதி!
திருவனந்தபுரம்:  கேரள உயர் நீதிமன்றத்தில் கொல்லத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா (40) என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நெய்யாட்டின்கராவைச் சேர்ந்த அருணா (24) என்பவரை அவரது பெற்றோர் பிரித்து சென்று வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்து இருப்பதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து அருணாவை காவல்துறையினர் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஸ்ரீஜாவுடன் சேர்ந்து வாழவே தாம் விரும்புவதாக அருணா நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

– வணக்கம் இந்தியா

From around the web