அதிர்ச்சி!கேரள விமான விபத்து!6 பேர் உயிரிழப்பு! 40 பேர் படுகாயம்!

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க சர்வதேச விமான சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மீட்க உதவும் விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துபாயில் இருந்து நேற்று புறப்பட்டு கேரளா கோழிக்கோட்டை அடைந்த விமானம் ஓடுதளத்தில் இரண்டாக உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது தொடர்மழை பெய்து வருவதால் நிலப்பரப்பு ஈரப்பதமாக இருந்ததாகத் தெரிகிறது. துபாயில் நேற்று மதியம் 1. 30
 

அதிர்ச்சி!கேரள விமான விபத்து!6 பேர் உயிரிழப்பு! 40 பேர் படுகாயம்!இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க சர்வதேச விமான சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மீட்க உதவும் விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் துபாயில் இருந்து நேற்று புறப்பட்டு கேரளா கோழிக்கோட்டை அடைந்த விமானம் ஓடுதளத்தில் இரண்டாக உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தற்போது தொடர்மழை பெய்து வருவதால் நிலப்பரப்பு ஈரப்பதமாக இருந்ததாகத் தெரிகிறது.

துபாயில் நேற்று மதியம் 1. 30 மணிக்கு புறப்பட்ட  இந்த விமானம் இரவு7. 41க்கு மேடான ஓடுதளப்பாதையில் இருந்து விலகி, கீழே கால்வாய் பகுதியில் விழுந்து இரண்டாக உடைந்துள்ளதாகவும் இரவு நேரமானதால் ஏற்கனவே  பலத்த மழை காரணமாக நீர் வெள்ளமாக தேங்கியுள்ளது. இதன் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் மந்த நிலையில் நடைபெற்று வருகின்றன.

கோழிக்கோடு விமான விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் பதற்றம் அடையாமல் இருக்க இலவச எண்ணை கேரள அரசு  அறிவித்துள்ளது. 056 546 3903, 054 309 0572, 054 309 0572 , 054 309 05752 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமான ஓட்டி உட்பட இதுவரை  6 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web