கீழடிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விதைப்பந்துகளை வழங்கும் இளைஞர்கள்!

கீழடி: கீழடியில் நடைபெறும் 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட வருவோருக்கு அப்பகுதி இளைஞர்கள் விதைப்பந்துகளை வழங்கி வருகிறார்கள். கீழடியில் நடைபெற்று வரும் 5 ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் 15 ம் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் அகழ்வாராய்ச்சி பணிகளையும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட தமிழகம் முழுவதுமிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் குவிந்துவருகிறார்கள். கீழடியின் சிறப்பு குறித்து அறிந்துகொள்ள வரும் சுற்றுலாப் பயணிகளிடம் மரம் வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்த கீழடி இளைஞர்கள்
 

கீழடிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விதைப்பந்துகளை வழங்கும் இளைஞர்கள்!கீழடி: கீழடியில் நடைபெறும் 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட வருவோருக்கு அப்பகுதி இளைஞர்கள் விதைப்பந்துகளை வழங்கி வருகிறார்கள்.

கீழடியில் நடைபெற்று வரும் 5 ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் 15 ம் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் அகழ்வாராய்ச்சி பணிகளையும் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட தமிழகம் முழுவதுமிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் குவிந்துவருகிறார்கள்.

கீழடியின் சிறப்பு குறித்து அறிந்துகொள்ள வரும் சுற்றுலாப் பயணிகளிடம் மரம் வளர்ப்பதன் அவசியத்தை உணர்த்த கீழடி இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அவர்கள், வேம்பு, புளிய விதைகள் வைக்கப்பட்ட விதைப்பந்துகளை தயாரித்து விநியோகிக்கிறார்கள்.

கண்மாய்களிலிருந்து களிமண் , கீழடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து சேகரிக்கப்பட்ட வேம்பு , புளிய விதைகளை கொண்ட விதை பந்துகள் முறையாக செய்து, காய வைத்த அந்த விதைப் பந்துகளை சுற்றுலா பயணிகளிடம் விநியோகித்து வருகின்றனர்.

-வணக்கம் இந்தியா

From around the web