கீழடி… அது எங்கள் உரிமை.. முழங்கும் அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள்!

கீழடி பற்றிய விழிப்புணர்வு உலகமெங்கும் உள்ள அடுத்தத் தலைமுறை தமிழர்கள் மத்தியிலும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசி பகுதியில் செயல்பட்டு வரும் சங்கமம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கீழடி பற்றிய பாடலைப் பாடி அனைவரையும் உணர்ச்சி வசப்படுத்தியுள்ளார்கள். லோகா ராமசாமி எழுதியுள்ள இந்தப் பாடல் , “வைகை நதியின் கரையோரம் கீழடி என்றோரு கிராமம்” என்று தொடங்குகிறது. இடையில், “வந்தேறி கூட்டம் ஒன்று கண்டபடி பேசியதே சங்க இலக்கியம் பேசும் நகரம் எல்லாம் கட்டு
 

கீழடி… அது எங்கள் உரிமை.. முழங்கும் அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள்!கீழடி பற்றிய விழிப்புணர்வு உலகமெங்கும் உள்ள அடுத்தத் தலைமுறை தமிழர்கள் மத்தியிலும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசி பகுதியில் செயல்பட்டு வரும் சங்கமம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கீழடி பற்றிய பாடலைப் பாடி அனைவரையும் உணர்ச்சி வசப்படுத்தியுள்ளார்கள்.

லோகா ராமசாமி எழுதியுள்ள இந்தப் பாடல் , “வைகை நதியின் கரையோரம் கீழடி என்றோரு கிராமம்” என்று தொடங்குகிறது. 

இடையில், “வந்தேறி கூட்டம் ஒன்று கண்டபடி பேசியதே சங்க இலக்கியம் பேசும் நகரம் எல்லாம் கட்டு கதை என்று கூறியதே.” என்று சாட்டையடியும் கொடுத்துள்ளார் பாடலாசிரியர்.

மேல் அடி பட்டாலும் கீழடி மறவோம் எம்மொழி கற்றாலும் தாய்மொழி மறவோம் நம் ..தமிழ்மொழி மறவோம் என்று பாடல் முடிவடைகிறது.

பாடலை நேரடியாக மேடையில், மிகக்குறைவான இசைக்கருவிகளுடன் கணீர் குரல்களில் இந்த அமெரிக்க குழந்தைகள் பாடுவதை கேட்கும் போது மெய் சிலிர்கிறது. தமிழர் என்ற உணர்வை தட்டி எழுப்புதாக அமைந்துள்ளது.

 

A1TamilNews.com

From around the web