கீழடியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பா?

கீழடியில் 6வது கட்ட அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழி போன்ற பொருள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியை அடுத்த அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் 6வது கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. கொந்தகை பகுதியில் முதுமக்கள் தாழி போன்ற மண்பாண்டம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் பெரிய அகலமான பானை போல் இருக்கும் இந்த மண் பாண்டத்தை முழுவதுமாக தோண்டி எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக 50 ஆண்டுகளுக்கு முன்னால் இதே பகுதியில் முதுமக்கள் தாழி
 

கீழடியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பா?கீழடியில் 6வது கட்ட அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழி போன்ற பொருள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியை அடுத்த அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் 6வது கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

கொந்தகை பகுதியில் முதுமக்கள் தாழி போன்ற மண்பாண்டம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் பெரிய அகலமான பானை போல் இருக்கும் இந்த மண் பாண்டத்தை முழுவதுமாக தோண்டி எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக 50 ஆண்டுகளுக்கு முன்னால் இதே பகுதியில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்டுள்ளது. கிழடி முழுவதும் மக்கள் வாழ்ந்த நகரமாக இருப்பதாக இது வரை நடந்த ஆராய்ச்சிகளில் தெரிய வந்தது. இறந்தவர்களை ஊருக்கு வெளியே தாழிக்குள் வைத்து புதைக்கும் இடமாக கொந்தகை பகுதி இருந்திருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளது.

தூத்துக்குடி அருகே தாமிரபரணி நதிக்கரையோரம் ஆதிச்சநல்லூர் தான் இது வரையிலும் அதிக அளவில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடமாகும். அங்கு அகழ்வாராய்ச்சிகளை மீண்டும் தொடங்க வேண்டும். ஏற்கனவே செய்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

http://www.A1TamilNews.com

 

From around the web