கணிணித் துறையை தமிழகத்திற்கு மீட்டுத் தந்த ‘நாயகன்’ கலைஞர்!

படிப்பு முடிந்ததும் என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. சென்னையில் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை. அண்ணன் அங்கிருந்ததால் அழைப்பு வர பெங்களூர் சென்றேன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கணக்கியல் பிரிவில் பணி கிடைத்தது பெரிய நிறுவனங்களில் மட்டுமே கம்ப்யூட்டர் பிரிவு தொடங்கப்பட்டு கணிணித் துறை மெல்ல மெல்ல இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்திருந்த காலம். தமிழகத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. கர்நாடகத்தில் தேவகவுடா. ஒரு நாள் அங்கு பரபரப்பான செய்தி. இந்தியாவிலேயே முதல் ஐடி பார்க் பெங்களூர் வருவதாகவும்,
 

 

 கணிணித் துறையை தமிழகத்திற்கு மீட்டுத் தந்த  ‘நாயகன்’ கலைஞர்!

டிப்பு முடிந்ததும் என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. சென்னையில் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை. அண்ணன் அங்கிருந்ததால் அழைப்பு வர பெங்களூர் சென்றேன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கணக்கியல் பிரிவில் பணி கிடைத்தது பெரிய நிறுவனங்களில் மட்டுமே கம்ப்யூட்டர் பிரிவு தொடங்கப்பட்டு கணிணித் துறை மெல்ல மெல்ல இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்திருந்த காலம். தமிழகத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. கர்நாடகத்தில் தேவகவுடா.

ஒரு நாள் அங்கு பரபரப்பான செய்தி. இந்தியாவிலேயே முதல் ஐடி பார்க் பெங்களூர் வருவதாகவும், முதல்வர் தேவகவுடா சென்னை சென்று, சிங்கப்பூர் முதலீட்டாளர்களிடம் பேசி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் அந்த செய்தி சொன்னது. அது தான் இன்றைய ஒயிட்ஃபீல்டில் இருக்கும் முதல் ஐடி பார்க். சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் சென்னையை விரும்பியதாகவும், ஆளும் தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்காததால் தேவகவுடாவுக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் கூடுதல் தகவல்.

ஐடி துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். முதன் முதலில் வரும் டெக்னாலஜிக்கு முதல் ஆளாக, முன்னோடியாக நாம் நுழைந்தால், அதில் பெரும் ஜாம்பவனாக வர முடியும் என்பது இன்றும் நடைமுறை விதி.

தேவகவுடா ஆரம்பித்து வைத்தார். அடுத்து வந்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து பெங்களூரை ஐடி தலைநகராக ஆக்க முயற்சி எடுத்தார். ஏற்கனவே அங்கிருந்த இன்ஃபோஸிஸ், விப்ரோ நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கு வழி செய்தார்.

இன்னொரு பக்கம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்கா வரையிலும் சென்று தன்னை ஆந்திராவின் சி.இ.ஒ என அறிவித்து, மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள் நிறுவனங்களில் இந்திய தலைமையகத்தை ஐதராபாத்துக்கு கொண்டு சென்றார். விமான நிலையம், நவீன சாலைகள், புது நகரம் என ஐடி துறையை அலாக்காக அங்கே கொண்டு சென்று விட்டார்.

ஐடி துறையில் யார் முன்னணி என்று கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் போட்டி!. தமிழ்நாட்டு இளைஞர்கள் மொழி தெரியாத ஐதராபாத்துக்கும் பெங்களூருக்கும் வேலைக்காக படையெடுத்தார்கள். ஞாயிற்றுக் கிழமை மதுரை பெங்களூர் ரயிலிலும், சென்னை – பெங்களூர் மெயிலிலும் இடம் கிடைக்காது. பஸ்களில் கொள்ளைக் கட்டணம் இருக்கும்.

1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார் கலைஞர் கருணாநிதி, கிராமங்களுக்கு சிமெண்ட் சாலை, உழவர் சந்தை, மினி பஸ்கள் என எத்தனையோ புதிய திட்டங்களுக்கு மத்தியில் ‘டைடல் பார்க்’ திட்டத்தையும் அறிவித்து விரைவிலேயே முடித்தும் காட்டினார். சிறுசேரி டெக்னாலஜி நகரம் ஆனது. ஒஎம்ஆர் என அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலை முழுக்கவும் ஐடி நிறுவனங்கள் அமையக் காரணமானார்.

அது மட்டுமல்லாமல், கல்லூரியில் முதுகலைக் கல்வியை இலவசமாக்கினார். திருச்சி மாவட்டத்த்தின் ஒரு கிராமத்தில், கட்டணம் இல்லாமல் எம்.சி.ஏ படித்த கூலித் தொழிலாளியின் மகன் ஒருவரை நானே இண்டர்வியூ செய்து வேலைக்கு எடுத்துள்ளேன். இன்று பிரபல நிறுவனத்தில் முக்கிய பணியில் இருக்கிறார்.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு ஒரு புறம் கட்டமைப்புகள் உருவாக்கி, நிறுவனங்களை அழைத்தவர், இன்னொரு புறம் ஏழை மாணவனுக்கும் அந்த வசதி கிடைக்க, கணிணிக் கல்வியை இலவசமாக்கி வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தார்.

அலுவலக அறையிலேயே அமர்ந்து பார்க்கக்கூடிய, வேலைக்காக ஏன் சென்னை வரை வரவேண்டும்? என மாநகராட்சிகள் அனைத்திலும் டைடல் பார்க்குகள் அமைத்து பெரும் நிறுவனங்கள் அங்கும் கிளைகள் அமைக்க வேண்டும் என்று உறுதி வாங்கினார்.

கர்நாடகாவும் ஆந்திராவும் பங்கு போட்டுக் கொண்டிருந்த கணிணித் துறையில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக தமிழ்நாட்டுக்கும் தனது பங்கை மீட்டுத் தந்தார் கலைஞர் கருணாநிதி.

கணிணித் துறை உள்ள வரையிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் போற்றிப் புகழப்பட வேண்டியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.

#கலைஞர்கருணாநிதி #HBDKalaingar97

– இர.தினகர்

A1TamilNews.com

From around the web