வெளிநாடு வாழ் தமிழர்களே.. அங்கே பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்காக குரல் எழுப்பத் தயாராகுங்கள் – கார்த்திகேயே சிவசேனாபதி!

இந்திய நாட்டை சேர்ந்த பல மாநிலங்களின் மக்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். தமிழகத்திலிருந்தும் பல நாடுகளில், தமிழ் மக்கள் தொழில் செய்து கொண்டும், வாழ்ந்தும் வருகிறார்கள். ஒரு மிகப் பெரிய வித்தியாசம், தமிழ்ச் சங்கங்களில் இருக்கக் கூடிய தமிழர்களைப் பார்க்கும் பொழுதும் குஜராத், உத்திர பிரதேசம் மற்றும் வட இந்திய மக்களைப் பார்க்கும் பொழுதும் என்ன தென்படும் என்றால், தமிழ்ச் சங்கங்கள், தமிழ் மக்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளி நாடுகளில் வாழ்வோர் எல்லோரும், ஜல்லிக்கட்டு,நீட், நெடுவாசல், கதிராமங்கலம், சேலம் சென்னை
 

ந்திய நாட்டை சேர்ந்த பல மாநிலங்களின் மக்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். தமிழகத்திலிருந்தும் பல நாடுகளில், தமிழ் மக்கள் தொழில் செய்து கொண்டும், வாழ்ந்தும் வருகிறார்கள்.

ஒரு மிகப் பெரிய வித்தியாசம், தமிழ்ச் சங்கங்களில் இருக்கக் கூடிய தமிழர்களைப் பார்க்கும் பொழுதும் குஜராத், உத்திர பிரதேசம் மற்றும் வட இந்திய மக்களைப் பார்க்கும் பொழுதும் என்ன தென்படும் என்றால், தமிழ்ச் சங்கங்கள், தமிழ் மக்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளி நாடுகளில் வாழ்வோர் எல்லோரும், ஜல்லிக்கட்டு,நீட், நெடுவாசல், கதிராமங்கலம், சேலம் சென்னை எட்டு வழிச் சாலை, தூத்துக்குடி படுகொலை,காவேரி நீர் பிரச்சனை இதுபோன்ற விடயங்களைப் பற்றிப் பேசுவார்கள், விவாதிப்பார்கள் அதற்காகப் போராடுவார்கள், வருந்துவார்கள், பலர் வெளி நாடுகளில் வாழ்ந்தாலும் இப்பிரச்சினைகளை எண்ணித் தூக்கத்தினை தொலைத்தனர் என்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும் .

ஏன் தமிழகத்திலிருந்து செல்லக்கூடியவர்கள் மட்டும் இது போன்ற தமிழகத்திற்கு நடக்கக்கூடிய அநீதியால் பாதிக்கப்பட்டு மனம் வருந்துகிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்குச் சென்றவர்கள், மருத்துவராக, வழக்கறிஞர்களாக, பேராசிரியராக , பொறியாளராக, மென்பொருள் நிபுணர்களாக, இருக்கட்டும் அனைவருமே சாமானிய குடும்பங்களிலிருந்து பள்ளி கல்லூரிகளில் படித்து, வேலை வாய்ப்பினை பெற்று, கடின உழைப்பால் முன்னேறியவர்கள்.

அவர்களின் மூத்த தலைமுறையினர், கோடீசுவரர்களோ, பட்டம் பெற்றவர்களோ, அரசு அதிகாரிகளோ , தொழில் அதிபர்களோ இல்லை. சாதாரண தொழிலாளிகள், சிறு, குறு விவசாயிகளின் பிள்ளைகள், விவசாயத்தால் நட்டம் அடைந்தவர்கள், அரசு உழியர்கள், போன்றோரின் பிள்ளைகள் பெற்றோரின் கடின உழைப்பால் தனது அடுத்த தலைமுறையைச் செதுக்கி வெளி நாடுகளுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக அனுப்பி வைக்கப் பட்டவர்கள்.

ஆதலால் தான் அவர்களுக்கு நான் பணக்காரன் வசதி இருக்கின்றது என்றோ இன்று அமெரிக்காவில் டாலர், ஐரோப்பாவில் யூரோவில் சம்பாதிக்கிறேன் என்றோ, வீடு வாகனம் இருக்கின்றது என்று பெருமை கொள்ளாமல், இங்குத் தமிழகத்தில் இருக்கும் மக்களைப் பற்றித் தொடர்ந்து தமிழக மக்களின் துன்பத்தினை நினைத்து என்றும் கவலை கொள்கின்றனர். இவ்வாறாகச் சமூகநீதிக்காகவும், வாழ்வாதாரங்களுக்காகவும் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இதே வட மாநிலங்களை எடுத்துக் கொண்டால், தனது முந்தைய இரண்டு தலைமுறையினர் வசதி வாய்ப்புடன் இருந்தவர்களாக, இவர்கள் மட்டும் தான் கல்வி வேலைவாய்ப்பினை பெற முடிந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் சூழலும் உள்ளது. இவர்கள் தான் வெளி நாடுகளில் வேலை பார்த்துக் கொண்டு நாட்டுப் பற்று என்ற போர்வையில் எதைப் பற்றியும் கவலை இன்றி மத வெறி, போன்ற விடயங்களைப் பிடித்துக் கொண்டு ஆனால் அதனைப் பற்றி வெளியில் பேசாமல் நாட்டுப் பற்று என்று பேசி வாழ்க்கை நடத்திக் கொண்டு வருவார்கள்.

இப்பொழுது என்னுடைய வேண்டுதல் என்னவென்றால் வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் தயவு செய்து நீங்கள் தமிழர்களாக வாழுங்கள் தவறில்லை. தமிழினத்தை நிச்சயமாகக் காப்பாற்ற வேண்டும். ஆனால் இனிமேல் நீங்கள் வாழும் நாடுகளின் அரசியலில் தொடர்பு கொள்ளுங்கள் .

இதனை ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின்டெக்ஸாஸ் மாநிலம் டாலஸ் நகரில் பேசி உள்ளேன். வெளிநாடு வாழ் தமிழர்கள் வாழும் நாடுகளின் அரசியலில் இணைந்து பணியாற்றுங்கள். நீங்கள் மாநிலங்கள் அந்தந்த மாநில உறுப்பினர்களாகப் பணி ஏற்று அடுத்த பத்து வருட காலத்தில் அவ்விடத்தினை பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணி செய்யத் தொடங்குங்கள்

இரண்டு காரணங்கள்

உங்களை எந்த நாடு வாழ வைக்கின்றதோ, அந்த நாட்டின் பொது வாழ்வில் பங்கு கொள்ள வேண்டும். அந்த நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் பாடுபட வேண்டும்.

இங்கே தமிழகத்தில் இருக்கும் சூழல் உங்களுக்குத் தெரியும். எங்களுக்கெல்லாம் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்றால் உலகளவில் நீங்கள் வாழும் நாடுகளின் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நீங்கள் சட்டத் திருத்தங்கள் ஏற்படுத்துவதும், தமிழர்களின் பிரச்சனையை அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும் நிலையில் நீங்கள் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

ஆதலால் அதைப் பற்றிச் சிந்தித்து அடுத்த பத்து வருட காலத்திலே 2029 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஜெர்மனி, லண்டன், சுவீடன் நோர்வே, பின்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளின் பாராளுமன்றத்தில் நீங்கள் தமிழகத்தின், தமிழர்களின் பிரச்சனைகளுக்கு குரல் எழுப்ப வேண்டும். அது தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு ஒரு மாபெரும் பலமும் பாதுகாப்பும் ஆகும்.

ஆதலால் இதனைச் சிந்தித்து நீங்கள் உங்களை அந்த அந்த நாட்டின் அரசியலில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி வணக்கம்

– கார்த்திகேய சிவசேனாபதி

 

From around the web