கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள்… எடியூரப்பாவுக்கு செக்?

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் 3 துணை முதல்வர்கள் நியமிக்கப் பட்டுள்ளது, முதல்வர் எடியூரப்பாவுக்கு, பாஜக மேலிடம் கொடுக்கும் நெருக்கடியா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து பாஜக சார்பில் முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா. ஆனாலும், உடனடியாக அவரால் அமைச்சர்களை நியமனம் செய்ய முடியவில்லை. தற்போது 17 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் 3 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். ஆளுநர் வஜுபாய் வாலா, இலாக்காக்களை ஒதுக்கியதற்கான
 

கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள்… எடியூரப்பாவுக்கு செக்?

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் 3 துணை முதல்வர்கள் நியமிக்கப் பட்டுள்ளது, முதல்வர் எடியூரப்பாவுக்கு, பாஜக மேலிடம் கொடுக்கும் நெருக்கடியா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து பாஜக சார்பில் முதல்வராகப் பதவியேற்றார் எடியூரப்பா. ஆனாலும், உடனடியாக அவரால் அமைச்சர்களை நியமனம் செய்ய முடியவில்லை. தற்போது 17 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் 3 பேர் துணை முதல்வர்களாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். ஆளுநர் வஜுபாய் வாலா, இலாக்காக்களை ஒதுக்கியதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மூன்று துணை முதல்வர்களை நியமித்துள்ளது ஏன் என்ற கேள்வி கர்நாடகா அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தலித் சமுதாயத்திலிருந்து கோவிந்த் கர்ஜோல், ஒக்கலிக்கா சமுதாயத்திலிருந்து அஸ்வத்நாராயண், லிங்காயத்திலிருந்து லஷ்மண் சவடி என மூன்று சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடியூரப்பாவும் லிங்காயத் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதால், லஷ்மண் சாவடியின் துணை பதவி தான் கூடுதல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. லஷ்மண் சவடியின் நியமனத்திற்கு எடியூரப்பா கடும் ஆட்சேபம் தெரிவித்த போதும், முடிவை மேலிடம் மாற்றிக் கொள்ளவில்லையாம். கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்குவதற்கான  ஏற்பாடு என்று கூறப்பட்டாலும், எடியூரப்பாவுக்கு செக் வைப்பதற்காகத் தான் என்றும் பேசப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மூன்று துணை முதல்வர்களுமே ஆர்.எஸ்.எஸ், பாஜக பின்னணியிலிருந்து வந்தவர்கள் அல்ல. மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்தவர்கள் தான்.

கர்நாடக அமைச்சரவை வரலாற்றிலேயே முதல் தடவையா மூன்று துணை முதல்வர்கள் நியமிக்கப் பட்டுள்ளது, எடியூரப்பாவுக்கு ’செக்’ வைப்பதற்காகத் தான் என்றும், விரைவிலேயே அவருக்கு கல்தா கொடுத்தாலும் ஆச்சரியமில்லை என்றும்பெங்களூரு அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

– வணக்கம் இந்தியா

 

From around the web