அனைத்து தமிழக வாகனங்களுக்கும் தடை விதித்தது கர்நாடக அரசு !

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு ரயில் மற்றும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிப்பவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து
 

அனைத்து தமிழக வாகனங்களுக்கும் தடை விதித்தது கர்நாடக அரசு !கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு ரயில் மற்றும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிப்பவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரயில்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்களுக்கு தடை விதித்துள்ளது கர்நாடக அரசு.

கர்நாடக மாநிலத்தில் மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web