‘தூத்துக்குடி மக்களுக்கு நீதி வேண்டும்’ – பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி.கனிமொழி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த எம்.பி.க்கள் பதிலளித்துப் பேசினார்கள். தூத்துக்குடியிலிருந்து முதல் தடவையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி பேசியதாவது: “தூத்துக்குடியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இந்த கொடுரத்தால் நாடே அதிர்ந்து போன
 

டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி.கனிமொழி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த எம்.பி.க்கள் பதிலளித்துப் பேசினார்கள். தூத்துக்குடியிலிருந்து முதல் தடவையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி பேசியதாவது:

“தூத்துக்குடியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இந்த கொடுரத்தால் நாடே அதிர்ந்து போன நிலையில், துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை 2018ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி உத்தரவிட்டது.

நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப் பட்டிருந்தது. துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு வருடம் ஆகியுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 10 மாதங்கள் ஆகிறது. ஆனால் விசாரணையில் இது வரையிலும் ஒரு போலீஸ் அதிகாரி பெயரையும் கூட எஃப்.ஐ.ஆரில் சேர்க்கவில்லை. 

தேசிய மனித உரிமை ஆணையம் இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. ஆனால், மாநில அரசு அமைத்த ஆணையத்தின் அறிக்கையைக் காரணம் காட்டி, மனித உரிமை ஆணையம் தனது ஆய்வை முடித்துக் கொண்டது. அறிக்கையையும் பொதுவெளியில் வெளியிட்வில்லை. 

துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை போதுமான அளவில் இல்லாததால், உரிய சிகிச்சை கூட மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப் படவில்லை.

17 வயதே ஆன ஸ்னோலின் என்ற இளம்பெண்ணை தலையில் குறிபார்த்து சுட்டுக் கொன்றுள்ளார்கள். துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு நீதி வேண்டும். நீதி கிடைத்தே ஆக வேண்டும்,” என்று கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் பேச கிடைத்த முதல் வாய்ப்பிலேயே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பாராளுமன்றத்தில் அழுத்தமாக பதிவு செய்து சி.பி.ஐ விசாரணையின் மீது கேள்வியும் எழுப்பியுள்ளார் 

தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி, சம்மந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகளிடம் முறையிட்டு நீதி கிடைக்கச் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

From around the web