ஏன் இன்னும் எப்.ஐ.ஆர் போடவில்லை! குற்றவாளிகளை காப்பதற்கு மௌனம் சாதிக்கும் எடப்பாடி அரசு! கனிமொழி எம்.பி. விளாசல்!!

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் போலீஸ் காவலில் உயிரிழந்துள்ள சம்பவத்தில், தொகுதி எம்.பி.யான கனிமொழி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். குற்றவாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சேர்ந்து போராடப் போவதாக உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நீண்ட கடிதம் எழுதியுள்ள கனிமொழி எம்.பி. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, குற்றவாளிகளை காப்பதற்காக மௌனம் காக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். ”சாத்தான்குளம்
 

ஏன் இன்னும் எப்.ஐ.ஆர் போடவில்லை! குற்றவாளிகளை காப்பதற்கு மௌனம் சாதிக்கும் எடப்பாடி அரசு! கனிமொழி எம்.பி. விளாசல்!!தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் போலீஸ் காவலில் உயிரிழந்துள்ள சம்பவத்தில், தொகுதி எம்.பி.யான கனிமொழி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். குற்றவாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சேர்ந்து போராடப் போவதாக உறுதியளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு நீண்ட கடிதம் எழுதியுள்ள கனிமொழி எம்.பி. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, குற்றவாளிகளை காப்பதற்காக மௌனம் காக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

”சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் என இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையிலும் இதுவரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாததும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததும் ஏன்? எடப்பாடி அரசு இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது,” என்று ட்விட்டர் மூலம் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

கனிமொழி எம்.பி பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்து பெண்களைச் சந்தித்துப் பேசி, திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி வந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜுவும் அதே போல் சென்று அரசு தரப்பிலிருந்து 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com

From around the web