மருத்துவர் கனவை பறிக்கும் மத்திய அரசு – கனிமொழி எம்.பி!

சங்கரன்கோவில்: தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவர் கனவை நீட் தேர்வு மூலம் மத்திய அரசுபறித்துள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். சங்கரன் கோவிலில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமணவிழாவில் கனிமொழி கலந்து கொண்டார். பின்னர் பேசிய கனிமொழி கூறியதாவது, “தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் மருத்துவராகும் வாய்ப்பை, நீட் தேர்வு மூலம் மத்திய அரசு பறித்து வருகிறது. திமுக ஆட்சிகாலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும் மருத்தவர் ஆகலாம் என்ற நிலையை உருவாக்கினோம். பல்வேறு போராட்டங்களுக்குப்
 

மருத்துவர் கனவை பறிக்கும் மத்திய அரசு – கனிமொழி எம்.பி!

சங்கரன்கோவில்: தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவர் கனவை நீட் தேர்வு மூலம் மத்திய அரசுபறித்துள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

சங்கரன் கோவிலில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமணவிழாவில் கனிமொழி கலந்து கொண்டார். பின்னர் பேசிய கனிமொழி கூறியதாவது,

“தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் மருத்துவராகும் வாய்ப்பை, நீட் தேர்வு மூலம் மத்திய அரசு பறித்து வருகிறது. திமுக ஆட்சிகாலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களும் மருத்தவர் ஆகலாம் என்ற நிலையை உருவாக்கினோம். 

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதற்காக நாம் மீண்டும் போராட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் கனிமொழியின் பேச்சு, நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

From around the web