தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க கனிமொழி எம்.பி. கோரிக்கை

டெல்லி: மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் கட்டித் தருமாறு கனிமொழி எம்.பி. மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 38 நான்குவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இது பேருந்துகள், லாரிகள், கார்கள் என அதிகமான போக்குவரத்து உள்ள சாலையாகும். வழியில் எப்போதும் வென்றான், கீழ ஈரால், வேம்பூர் போன்ற மக்கள் அதிகமாக வசிக்கும் ஊர்கள் உள்ளன. இந்த ஊருக்கு மத்தியிலேயே இந்த சாலை செல்கிறது. புறவழிச்சாலைகள் அமைக்கப்பட
 

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க கனிமொழி எம்.பி. கோரிக்கை

டெல்லி: மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் கட்டித் தருமாறு கனிமொழி எம்.பி. மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 38  நான்குவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இது பேருந்துகள், லாரிகள், கார்கள் என அதிகமான போக்குவரத்து உள்ள சாலையாகும்.

வழியில் எப்போதும் வென்றான், கீழ ஈரால், வேம்பூர் போன்ற மக்கள் அதிகமாக வசிக்கும் ஊர்கள் உள்ளன. இந்த ஊருக்கு மத்தியிலேயே இந்த சாலை செல்கிறது. புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வில்லை.

உள்ளூர் மக்கள் சாலையைக் கடந்து மறுபுறம் செல்வதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். உயர்நிலைப் பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தருமாறு தேர்தல் பிரச்சாரத்தின் போதே இது பற்றி கனிமொழியிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த கோரிக்கைகளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் கனிமொழி எம்.பி. கொடுத்துள்ளார். 

அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி “தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட , எப்போதும் வென்றான், குறுக்குசாலை, கீழ ஈரால், வேம்பூர் மற்றும் மடத்தூர் விலக்கு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்துத் தருமாறு” கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான மனுவையும் அமைச்சரிடம் வழங்கியுள்ளார்.

கன ரக வாகனங்கள் அதிகமாக செல்லும் இந்த நெடுஞ்சாலையின் இரு பக்கமும் உள்ள ஊர் மக்கள், அடுத்த பக்கம் செல்வதற்காக சாலைகளைக் கடக்கும் போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார் கனிமொழி எம்.பி.

– வணக்கம் இந்தியா

From around the web