கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழாக்கள் ரத்து!

திமுக மாநில மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 5ம் தேதி பிறந்த நாள் காணும் கனிமொழி, தேசிய குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, ”அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள், பொதுமக்கள் என
 

திமுக மாநில மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை விடுத்துள்ளார்.

ஜனவரி 5ம் தேதி பிறந்த நாள் காணும் கனிமொழி, தேசிய குடியுரிமைச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

”அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளையில் எனது பிறந்தநாளை கொண்டாடத் தேவையில்லை என நினைக்கிறேன்.

‘அநீதி வீழூம், அறம் வெல்லும்’ என்ற தலைவர் கலைஞர் அவர்களின் வார்த்தைகளை நெஞ்சில் நிறுத்தி, தலைவர் தளபதியின் வழிகாட்டுதலோடு ஜனநாயகம் காக்க தொடர்ந்து போராடுவோம்,” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் கனிமொழி எம்.பி.

http://www.vanakamindia.com

From around the web