‘பாபநாசம் அணையை உடனடியாக தூர் வாருங்கள்..’ – எம்பி கனிமொழியின் ‘முதல் வாய்ஸ்’!

தூத்துக்குடி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி, பாபநாசம் அணையை உடனடியாக தூர் வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் வற்றாத நதி என்று கூறப்படும் தாமிரபரணி நதிக்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாபநாசம் அணையும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட மணிமுத்தாறு அணையும் தான் நீர் ஆதாரம் ஆகும். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் தேவைக்காக விருதுநகர்,
 

‘பாபநாசம் அணையை உடனடியாக தூர் வாருங்கள்..’ – எம்பி கனிமொழியின் ‘முதல் வாய்ஸ்’!தூத்துக்குடி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி, பாபநாசம் அணையை உடனடியாக தூர் வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் வற்றாத நதி என்று கூறப்படும் தாமிரபரணி நதிக்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாபநாசம் அணையும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட மணிமுத்தாறு அணையும் தான் நீர் ஆதாரம் ஆகும். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் தேவைக்காக விருதுநகர், ராமநாதபுர மாவட்டங்களும் தாமிரபரணி நதியை எதிர்நோக்கி உள்ளன.

மேலும் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை உட்பட தொழிற்சாலைகளுக்கும் இந்த அணைகளிலிருந்தே நீர் செல்கிறது. சமீபத்திய வழக்க்கு ஒன்றில் ஸ்டெர்லைட்டுக்கு தாமிரபரணி தண்ணீர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

தேர்தல் நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழைப்பயிருக்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை விடப்பட்டது. தொழிற்சாலைகளுக்கு நிறுத்தி விவசாயத்திற்கு திருப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. விவசாயிகளிடம் பாஜக வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான டாக்டர்.தமிழிசையும் வாக்குறுதி அளித்தார். விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஆனால், தொழிற்சாலைகளுக்கு அனுப்பி, அணை நீர் மட்டத்தை வெகுவாக குறைத்து விட்டனர் அதிகாரிகள்.

‘பாபநாசம் அணையை உடனடியாக தூர் வாருங்கள்..’ – எம்பி கனிமொழியின் ‘முதல் வாய்ஸ்’!https://twitter.com/KanimozhiDMK/status/1133337489484070912?s=19 

தற்போது பாபநாசம் அணையின் நீர் மட்டம் 10 அடிக்கும் கீழே குறைந்து விட்டது. அணையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. குடிநீருக்காக செல்லும் தண்ணீரும் துர்வாசம் வீசுகிறது. 

தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஆன கனிமொழி, “ நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விவசாயம், குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 10 அடிக்கு கீழே குறைந்துள்ளது. மீன்கள் செத்து மிதக்கிறது. அணையில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தொற்று நோய்கள் பரவாமல் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டப்பட்ட காலம் முதல் தூர்வாரப்படாமல் இருக்கும் பாபநாசம் அணையை உடனடியாக அவசரகால நடவடிக்கையாகக் கருதி தூர்வார வேண்டும் ,” என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபகாலத்தில் தாமிரபரணி நதி நீர் பிரச்சனைக்காக எந்த அரசியல்வாதிகளும் குரல் எழுப்பாத நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி எம்.பி. கனிமொழி குரல் எழுப்பியுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடி நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 
 

From around the web