மத்திய அரசுத் திட்டங்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதா? – கனிமொழி எம்.பி. ஆவேசம்!

டெல்லி: மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதா? என்று பாராளுமன்றத்தில் ஆவேசமாகக் குற்றம் சாட்டினார் கனிமொழி எம்.பி. மக்களவையில் இந்தப் பிரச்சனையை எழுப்பிய கனிமொழி கூறியதாவது, “இந்த அரசு எல்லாத் திட்டங்களையும் இந்தியிலேயே அறிவிக்கிறது. என்னுடைய தொகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவர் இதை எப்படி புரிந்து கொள்ள முடியும்? தூத்துக்குடியில், மொழி பெயர்ப்பு கூட இல்லாமல் “பி.எம். சடக் யோஜனா” என்று ஒரு திட்ட அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். இதை எப்படி அங்கு
 

டெல்லி: மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதா? என்று பாராளுமன்றத்தில் ஆவேசமாகக் குற்றம் சாட்டினார் கனிமொழி எம்.பி.

மக்களவையில் இந்தப் பிரச்சனையை எழுப்பிய கனிமொழி கூறியதாவது,

“இந்த அரசு எல்லாத் திட்டங்களையும் இந்தியிலேயே அறிவிக்கிறது. என்னுடைய தொகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவர் இதை எப்படி புரிந்து கொள்ள முடியும்? தூத்துக்குடியில், மொழி பெயர்ப்பு கூட இல்லாமல் “பி.எம். சடக் யோஜனா” என்று ஒரு திட்ட அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். இதை எப்படி அங்கு வசிக்கும் மக்கள் புரிந்து கொள்ள முடியும். 

ரயில்வேத் துறையையும், சேலம் உருக்காலையையும் தனியாரிடம் தாரை வார்க்கும் எந்த ஒரு முயற்சியையும் தமிழக மக்களும், திமுகவும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினும் முழு மூச்சுடன் எதிர்ப்போம்.

நம் நாட்டில் புல்லட் ரயில் முக்கியமானது அல்ல. இன்னமும் ரயில்வேத் துறையில் மலம் அள்ளுவதற்கு மனிதர்களைப் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறதே அது  அவமானமாகும். நேரடியாக ஆட்களை வேலைக்கு அமர்த்தவில்லை என்று ரயில்வே துறை சொல்கிறது. ஆனால் கான்ட்ராக்டர்கள் மூலமாக மனிதர்களை வேலைக்கு அமர்த்தி மலம் அள்ளும் அவலத்தை செய்ய வைக்கிறார்கள்.   இதை விட நம் நாட்டிற்கு அவமானம் ஏதும் இல்லை,” என்று கனிமொழி எம்.பி மக்களவையில் பேசியுள்ளார்.

தமிழக எம்.பி.க்கள் நாள் தோறும் ஏதாவது ஒரு பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய வண்ணம் உள்ளார்கள். அரசுத் தரப்பிலிருந்து தான் முறையான பதில்களோ, நடவடிக்கைகளோ வந்த பாடில்லை.

– வணக்கம் இந்தியா

From around the web