லாக்-அப் மரணம் இல்லையா? காவல்துறையை காப்பாற்றும் அப்பட்டமான முயற்சி!கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!!

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்தை மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் நிலையில், வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடியில் முகாமிட்டிருக்கும் கனிமொழி எம்.பி.க்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் இந்த விவகாரத்தில் போட்டி ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. கனிமொழி சாத்தான்குளத்தில் பாதிக்கப்பட்டவர் வீட்டுக்குச் சென்றால், பின்னாடியே அமைச்சரும் போகிறார். எட்டயபுரத்தில் காவல்துறையால் தாக்கப்பட்டு தற்கொலை செய்தவர் வீட்டிற்கு கனிமொழி போனால், அமைச்சரும் போகிறார். உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறை இருந்தால் அமைச்சர் உடனடியாக சென்றிருக்கலாம்
 

லாக்-அப் மரணம் இல்லையா? காவல்துறையை காப்பாற்றும் அப்பட்டமான முயற்சி!கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!!சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்தை மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் நிலையில், வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தூத்துக்குடியில் முகாமிட்டிருக்கும் கனிமொழி எம்.பி.க்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் இந்த விவகாரத்தில் போட்டி ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. கனிமொழி சாத்தான்குளத்தில் பாதிக்கப்பட்டவர் வீட்டுக்குச் சென்றால், பின்னாடியே அமைச்சரும் போகிறார்.

எட்டயபுரத்தில் காவல்துறையால் தாக்கப்பட்டு தற்கொலை செய்தவர் வீட்டிற்கு கனிமொழி போனால், அமைச்சரும் போகிறார். உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறை இருந்தால் அமைச்சர் உடனடியாக சென்றிருக்கலாம் தானே! கனிமொழி போவதால் ஒரு பக்க அரசியலாகிவிடும் என்று தங்கள் பங்கிற்கும் போவது போல் ஒப்புக்கு சப்பாகத் தான் தெரிகிறது அமைச்சரின் ஆறுதல் பயணங்கள்.

இந்நிலையில் கனிமொழி எம்.பி , அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு இடையே  “லாக்-அப் மரணம்” என்பதில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. கனிமொழி சாத்தான்குளத்தில் நடந்துள்ளது லாக்-அப் மரணம் என்கிறார். அமைச்சர் கடம்பூர் ராஜு, காவல்நிலையத்தில் மரணமடைந்தால் தான் லாக்-அப் மரணம் என்று விளக்கமளிக்கிறார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள கனிமொழி, “ சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என்று முதல்வர் கூறினார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார்.

இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்களுக்குள் என்ன அரசியல் வேண்டுமென்றாலும் பண்ணிக்கொள்ளட்டும். இறந்த இரண்டு பேருடைய மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே பொதுமக்கள் கூறுகிறார்கள்.

A1TamilNews.com

From around the web