உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தோசை!

தேவையான பொருட்கள் கம்பு-1கப் இட்லி அரிசி – 1 கப் உளுந்து – 1/4 கப் வெந்தயம் – 1டீஸ்பூன் எண்ணெய்-தேவையான அளவு உப்பு – தேவையான அளவு. செய்முறை: கம்பு, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சற்றே கொரகொரப்பாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துவைக்கவும். கரைத்த மாவை ஏழு மணி நேரம் புளிக்கவைத்து தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். பொருள்களின் அளவு குறைவாக இருந்தால் மிக்ஸியிலேயே
 

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தோசை!தேவையான பொருட்கள்
கம்பு-1கப்
இட்லி அரிசி – 1 கப்
உளுந்து – 1/4 கப்
வெந்தயம் – 1டீஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கம்பு, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சற்றே கொரகொரப்பாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துவைக்கவும். கரைத்த மாவை ஏழு மணி நேரம் புளிக்கவைத்து தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

பொருள்களின் அளவு குறைவாக இருந்தால் மிக்ஸியிலேயே எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு அரைக்கலாம். அதிகமாக அரைப்பதாக இருப்பதால் உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து அரைக்க வேண்டும்.

கம்பு, புழுங்கலரிசியை ஒன்றாக ஊறவைத்து அரைக்க வேண்டும். பிறகு இந்த இரண்டு மாவையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வைக்க வேண்டும்.

A1TamilNews.com

From around the web