அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக “தமிழ் வம்சாவளி“ கமலா ஹாரிஸ் ! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஜோ பைடன்!!

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் களத்தில் இறங்கியுள்ள நிலையில், அவருக்கு அதிபர் ட்ரம்ப்-ஐ விடவும் ஆதரவு பெருகி வருவதாக கருத்துக் கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவருடன் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடன் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளர் நிச்சயமாக ஒரு பெண்ணாகத் தான் இருப்பார் என்று ஜோ பைடன் முன்னதாக அறிவித்து இருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் கமலா
 

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக “தமிழ் வம்சாவளி“ கமலா ஹாரிஸ் ! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஜோ பைடன்!!னநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் களத்தில் இறங்கியுள்ள நிலையில், அவருக்கு அதிபர் ட்ரம்ப்-ஐ விடவும் ஆதரவு பெருகி வருவதாக கருத்துக் கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் அவருடன் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடன் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளர் நிச்சயமாக ஒரு பெண்ணாகத் தான் இருப்பார் என்று ஜோ பைடன் முன்னதாக அறிவித்து இருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் கமலா ஹாரிஸ்-ஐ துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

ஜார்ஜியா மாநில அரசின் எதிர்கட்சித் தலைவர் ஸ்டேசி அப்ரம்ஸ், மசசூசட்ஸ் செனட்டர் எலிசபெத் வாரன், கலிஃபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகியோருடைய பெயர்கள் பரிசீலனையில் இருந்தது.  முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், மிஷிகன் மாநில கவர்னர் க்ரெட்சென் விட்மெர், நியு மெக்சிகோ கவர்னர் மிஷல் லுஜன் க்ரிஷெம், விஸ்கான்சின் செனட்டர் டேமி பால்வின், இலனாய் செனட்டர் டேமி டக்வொர்த் ஆகியோர்களும் பரிந்துரைக்கப் பட்டிருந்தார்கள். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமாவின் பெயர் கூட இந்தப் பட்டியலில் இருந்ததாக செய்திகள் வெளியானது.

அதிபரும், துணை அதிபரும் இணக்காமான முறையில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். எதிர்பாராத சூழல் ஏற்பட்டால் அதிபர் பொறுப்பை ஏற்கவேண்டியதும் துணை அதிபர் தான். எனவே , துணை அதிபர் வேட்பாளரும் அதிபர் வேட்பாளருக்கு இணையான தகுதியும் திறமையும் உடையவர்களாக இருக்கிறார்களா, தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்களா என்ற கோணத்தில் பரிசீலிக்கப்படுவார்கள்.

கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவர், தாயார் சியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த தமிழர். தன்னுடைய தாத்தா கோபாலன் தான் தனக்கு ரோல்மாடல் என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார். கருப்பினத்தராகவே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்ட கமலா ஹாரிஸ் கருப்பின மக்களிடையே பிரபலமானவர். துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதால் கருப்பின மக்களின் வாக்குகள் முழுமையாக பைடன் – ஹாரிஸ் அணிக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கடந்த தேர்தலில் ஹிலரி க்ளிண்டனின் தோல்விக்குக் காரணம் பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்ஸின் மாநிலங்களில் கருப்பின வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை என காரணமாக கூறப்பட்டது. இந்த 3 மாநிலங்களின் வெற்றி தான் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெறுவதற்கு உதவியது. தற்போதைய கருத்துக் கணிப்புகள் படி ஜோ பைடன் இந்த மூன்று மாநிலங்களிலும் முன்னணியில் உள்ளார். கமலா ஹாரிஸின் வருகையால் ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் அணிக்கு, இங்கு மேலும் வாக்குகள் அதிகரிக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் வெற்றி, அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், முதல் கருப்பின பெண் துணை அதிபர், முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை அதிபர் என பல புதிய சாதனைகளை படைக்கும்.

A1TamilNews.com

 

From around the web