பிக்பாஸ் 3-க்குப் போனார் கமல் ஹாஸன்… இந்தியன் 2 கதி என்ன?

சென்னை: ரஜினிகாந்தை வைத்து 2.0 எனும் மிகப் பிரமாண்ட படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், அதே சூட்டோடு கமல் ஹாஸனை வைத்து சபாஷ் நாயுடு படத்தைத் தொடங்கியது. ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. எதற்காக நின்றது, அந்தப் படம் வெளியாகும் வாய்ப்பு உள்ளதா என்று படத்தின் இயக்குநரான கமல் ஹாஸனும் சொல்லவில்லை, லைகா நிறுவனமும் வாய் திறக்கவில்லை. 2.0 ரிலீசான பிறகு, இந்தியன் 2 படத்தின் வேலைகளை லைகா நிறுவனம் ஆரம்பித்தது. ஆனால் கமலின் வயதான
 

சென்னை: ரஜினிகாந்தை வைத்து 2.0 எனும் மிகப் பிரமாண்ட படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், அதே சூட்டோடு கமல் ஹாஸனை வைத்து சபாஷ் நாயுடு படத்தைத் தொடங்கியது. ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. எதற்காக நின்றது, அந்தப் படம் வெளியாகும் வாய்ப்பு உள்ளதா என்று படத்தின் இயக்குநரான கமல் ஹாஸனும் சொல்லவில்லை, லைகா நிறுவனமும் வாய் திறக்கவில்லை.

2.0 ரிலீசான பிறகு, இந்தியன் 2 படத்தின் வேலைகளை லைகா நிறுவனம் ஆரம்பித்தது. ஆனால் கமலின் வயதான தோற்றத்தில் ஷங்கருக்கு அத்தனை திருப்தியில்லை. எனவே அமெரிக்கா போய் கமலின் வயதான தோற்றத்தில் சில மாறுதல்கள் செய்து படப்பிடிப்பைத் தொடங்கினார். 4 நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்தது. அத்தோடு நிற்கிறது. இதற்கு ஷங்கர் – லைகா கருத்து வேறுபாடு, கமல் ஹாஸனின் அரசியல் வேலைகள் என பல காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் மொத்தத்தில் இந்தியன் 2 எப்போது தொடங்கும் எனத் தெரியாமல் அந்தரத்தில் நிற்கிறது.

இந்த நிலையில் கமல் ஹாஸன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீஸனைத் தொகுத்து வழங்க ஒப்பந்தமாகிவிட்டார். ஒப்பந்தப்படி அடுத்த 3 மாதங்கள் அவர் வேறு நிகழ்ச்சிகளுக்குப் போக வாய்ப்பில்லை. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் தேவர் மகன் 2 படத்தில் நடிக்கப் போகிறாராம். இயக்குநர் ஷங்கரும் வேறு ஒரு படத்துக்காக பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல்.

அப்படியென்றால் இந்தியன் 2?

– வணக்கம் இந்தியா

From around the web