‘தன் முயற்சியில் சற்றும் தளராத கமல்’ வலையில் சிக்குவாரா ரஜினி?

நாளை நமதே என்று கூறி கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் போட்டியிட்டார் கமல் ஹாஸன். நாம் தமிழர் கட்சிக்கு போட்டியாக மட்டுமே அந்தக் கட்சி வாக்குகளைப் பெற்றது. தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் அந்தக் கட்சியால், கட்சியின் தலைவர் கமல் ஹாஸனால் சாதிக்க முடியவில்லை. அதன் விளைவு, வேலூர் இடைத் தேர்தலில் அக்கட்சி போட்டியே போடவில்லை. கமல் ஹாஸனோ பிக்பாஸ் 3 நடத்தப் போய்விட்டார். முந்தைய இரு சீஸனிலும் பேசிய அளவுக்கு இப்போது பிக்பாஸ் 3ல் அரசியலும் பேசுவதில்லை.
 

நாளை நமதே என்று கூறி கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் போட்டியிட்டார் கமல் ஹாஸன். நாம் தமிழர் கட்சிக்கு போட்டியாக மட்டுமே அந்தக் கட்சி வாக்குகளைப் பெற்றது. தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் அந்தக் கட்சியால், கட்சியின் தலைவர் கமல் ஹாஸனால் சாதிக்க முடியவில்லை. அதன் விளைவு, வேலூர் இடைத் தேர்தலில் அக்கட்சி போட்டியே போடவில்லை. கமல் ஹாஸனோ பிக்பாஸ் 3 நடத்தப் போய்விட்டார். முந்தைய இரு சீஸனிலும் பேசிய அளவுக்கு இப்போது பிக்பாஸ் 3ல் அரசியலும் பேசுவதில்லை. எப்போதோ ஒரு முறைதான். அப்படி ஒருமுறை பேச நேர்ந்த போது ரஜினியுடன் இணைந்து அரசியல் செய்வது குறித்து மீண்டும் பேசியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பிருந்தே ரஜினியின் ஆதரவை கமல் கோரி வந்தார். ஆனால் கமல் ஹாஸனுக்கு வாழ்த்து சொன்னதோடு ரஜினி அமைதியாகிவிட்டார். திரும்ப திரும்ப செய்தியாளர்களிடம் ரஜினி ஆதரவைக் கோரி நின்றார் கமல். தேர்தலில் தோற்ற பிறகு ஒரு செய்தியாளர் சந்திப்பு வைத்தார். அதோடு அமைதியாகிவிட்ட கமல், மீண்டும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கிய போதுதான் பிரஸ் மீட்டே வைத்தார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாஸன், “மக்களின் நலனுக்காக, ரஜினியுடனும் கூட்டணி சேரத் தயார்,” என்றார்

ரஜினி கட்சியை ஆரம்பித்தால், சட்டசபை தேர்தலில், கமல், அவருடன் நிச்சயம் கூட்டணி அமைக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி மக்கள் மன்றத்தை துவக்கி, உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகளின் பலத்தை அதிகப்படுத்தி வரும் ரஜினி, கமலுடன் கூட்டணி வைப்பாரா?

கமல் கட்சிக்கு இப்போதுவரை அடிமட்டத்தில், குறிப்பாக கிராமப்புறங்களில் வலுவான அடித்தளமே இல்லை. யார் நிர்வாகிகள் என்பது கூட மய்யம் அபிமானிகளுக்குத் தெரியவில்லை. அப்படி இருக்கும் ஒரு கட்சியுடன், பெரும் பலத்தில் உள்ள ரஜினி கட்சி கூட்டணி அமைக்க ரஜினி ரசிகர்கள் விரும்புவார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ‘ரஜினி முதல்வர்’ என்ற நிபந்தனையை கமல் ஏற்றுக் கொண்டு, ரஜினி தலைமையில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்தால் ஒருவேளை கமல் கோரிக்கைக்கு முழுமையான சம்மதம் ரஜினி மக்கள் மன்றத்தினரிடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

தனது தனிப்பட்ட நட்பு வேறு, அரசியல் களம் வேறு என்பதில் வேறு யாரையும் விட தெளிவான பார்வை கொண்ட ரஜினிகாந்த், கமல் ஹாஸனின் கூட்டணி கோரிக்கையை எப்படி எடுத்துக் கொள்கிறார்… பார்க்கலாம்!

– வணக்கம் இந்தியா

From around the web