கிறிஸ்துவ அமைப்புகள் நிதியில் கட்சி நடத்துகிறேனா? – கமல் ஹாஸன் பதில்

ஈரோடு: கிறிஸ்தவ அமைப்புகளின் நிதி உதவியுடன் கட்சி நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் நடிகர் கமல் ஹாஸன். ஈரோடு மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுப் பயணம் செய்ய வந்த கமல் ஹாஸன், முதலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரசியலில் நான் வளா்ச்சி பெறுவதற்கு சினிமாவில் கிடைத்த புகழ் மட்டும் போதாது. ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகளை மன்னித்தது, ராகுல்காந்தியின் மனித நேயத்தை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் நாம் அனைவரும் கேட்பது சட்டத்தின் தளா்வுதான், மனித நேயம் வேறு,
 

கிறிஸ்துவ அமைப்புகள் நிதியில் கட்சி நடத்துகிறேனா? – கமல் ஹாஸன் பதில்

ஈரோடு: கிறிஸ்தவ அமைப்புகளின் நிதி உதவியுடன் கட்சி நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் நடிகர் கமல் ஹாஸன்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுப் பயணம் செய்ய வந்த கமல் ஹாஸன், முதலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரசியலில் நான் வளா்ச்சி பெறுவதற்கு சினிமாவில் கிடைத்த புகழ் மட்டும் போதாது.

ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகளை மன்னித்தது, ராகுல்காந்தியின் மனித நேயத்தை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் நாம் அனைவரும் கேட்பது சட்டத்தின் தளா்வுதான், மனித நேயம் வேறு, சட்டத்தின் தளா்வு வேறு.

கிறிஸ்தவ அமைப்புகள் எனக்கு நிதி உதவி செய்ததாக கூறுவது அா்த்தமற்ற குற்றச்சாட்டு. மேலும் எனக்கு இதனை கேட்கும் போது சிரிப்புதான் வருகிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் கவலைக்குரியது,” என்றார்.

From around the web