இந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்!

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 97 – ஆவது பிறந்த நாள். எத்தனை வருடங்கள் கடந்தாலும் எங்கள் இரணியனின் பிறந்த நாளை விண்ணதிரக் கொண்டாடும் அரக்கர் கூட்டம் என்றென்றும் கலைஞருக்கு உண்டு. எப்படி அவருக்கு மட்டும் இத்தனை கொண்டாட்டம்? என்று எண்ணுகின்றவர்களுக்கு விடை கலைஞர் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்பது தான். அவரின் திட்டங்கள் ஒவ்வொன்றும் எளிய மக்களை அதிகாரம் நோக்கி நகர வைத்திருக்கின்றது. அந்த வகையில் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்குக் கலைஞர் கொண்டு
 

இந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்!முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 97 – ஆவது பிறந்த நாள். எத்தனை வருடங்கள் கடந்தாலும் எங்கள் இரணியனின் பிறந்த நாளை விண்ணதிரக் கொண்டாடும் அரக்கர் கூட்டம் என்றென்றும் கலைஞருக்கு உண்டு. எப்படி அவருக்கு மட்டும் இத்தனை கொண்டாட்டம்? என்று எண்ணுகின்றவர்களுக்கு  விடை கலைஞர் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்பது தான். அவரின் திட்டங்கள் ஒவ்வொன்றும் எளிய மக்களை அதிகாரம் நோக்கி நகர வைத்திருக்கின்றது. அந்த வகையில் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்குக் கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் மூலம் பயன் பெற்ற பெண்கள் எவ்வாறு கலைஞரை மறக்க இயலும் ?திட்டங்கள் மட்டுமல்லாது தான் எழுதிய கதைகளில் , திரைப்பட வசனங்களில் பெண்களை அறிவுள்ளவர்களாக, சமத்துவம் பேசும் கதை மாந்தர்களாக அமைத்திருப்பார் கலைஞர்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தனிப் பள்ளிகளும் விடுதிகளும் அரசால் நடத்தப்படுவது போல இஸ்லாமிய பெண் குழந்தைகளுக்கு விடுதி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கலைஞரால் நிறைவேற்றப்பட்ட்டு அந்த மாணவிகளுக்காக 5 விடுதிகள் கட்டப்பட்டது இது இஸ்லாமிய மாணவிகள் கல்வி கற்கும் சூழல் எளிதாகியது

அதுமட்டுமல்ல அவரது ஆட்சியில்தான் சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்கள் பேசுவதற்காக கை தூக்கினாலும் சபாநாயகர் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச் சாட்டை கூற முடிந்ததுடன் அதற்கான தீர்வையும் பெற முடிந்தது என்று முன்னாள் சட்டபேரவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான பாலபாரதி பதிவு செய்திருப்பார்கள்.

இந்தியா முழுவதும் பெண்களுக்குச் சொத்துரிமை

 

1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானத்தைத் தந்தை பெரியார் நிறைவேற்றினார். அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டில் சட்டமாக இந்தியாவிலேயே முதன்முதலாகக் கொண்டு வந்தவர் கலைஞர் அவர்கள் தான் . அதன் பிறகு தான் இந்தியா முழுமைக்கும் 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியிலிருந்தபோது, கொண்டு வரப்பட்டது. கலைஞர் வலியுறுத்திக் கொண்டு வரப்பட்ட சட்டம் பெண்களுக்குச் சொத்துரிமை என்ற சட்டம் என்பதை இந்தியாவில் உள்ள பெண்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் .

இந்தியா முழுவதும் 33% சதவீதம் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் போது 1990 ஆம் ஆண்டு அரசு பதவிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்தவர் கலைஞர்.  

தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் முழுவதும் பெண்களாக இருக்க வேண்டும் என்பது தந்தை பெரியாரின் விருப்பம். அதை 1997 ஆம் ஆண்டு இரண்டாம் வகுப்பு வரை பெண் ஆசிரியைகள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்தவர் கலைஞர்.

பெண்கள் குஸ்தி கற்றுக்கொள்ள வேண்டும். காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்று பெண் விடுதலை குறித்து 1920 – களில் பேசியவர் தந்தை பெரியார். 1973 ஆம் ஆண்டில் , இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதன்முதலாக காவல்துறையில் பெண்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கான ஆணையிட்டவர் கலைஞர். அதே போல அரசியலில் நுழைய உள்ளாட்சித் தேர்தல் தான் அடித்தளம். அந்த தேர்தல்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் கலைஞர்.

இந்தியப் பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்!

மகப்பேறு நிதி உதவி

அதுமட்டுமல்ல, 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளவும், வேலைக்குச் செல்ல முடியாமல் அதனால் ஏற்படும் வருவாய் இழப்பினை சரிக்கட்டவும் , கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவி வழங்கப்பட்டது. என்னே கலைஞரின் தாயுள்ளம் ?!

பெண் குழந்தைகளைக் கொன்று விடும் தமிழ்நாட்டில் , உயிருடன் இருந்தாலும் வீட்டு வேலைகளுக்காகப் பெண் இருந்தால் போதும் என்ற குடும்ப அமைப்பில்,  1990-ம் ஆண்டு 8-ஆம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்குத் திருமண நிதி உதவியாக ரூ.5000/- வழங்கும் திருமண நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பெண் குழந்தைகள் குறைந்தபட்சம் 8 – ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றனர்.

அதன் பிறகு , 1996-ம் ஆண்டு முதல் 10வது படித்த ஏழைப் பெண்களுக்கும் வழங்கலாம் எனத் திட்டத்தை நீட்டித்து திருமண நிதி உதவியையும் ரூ.5000/-லிருந்து ரூ.10000/-ஆக உயர்த்தி கலைஞர் ஆணையிட்டார். இந்த திருமண நிதி உதவிதான் 2006 முதல் 15000 ரூபாய் என்றும், 2010 முதல் 20000 ரூபாய் என்றும் கழக ஆட்சியில் உயர்த்தப்பட்டது.

இவ்வாறு, பெண் அடிப்படை கல்விக்கு இந்த திட்டம் அடித்தளமிட்டது.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதி உதவி திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், இவைகளின் மூலம் இலட்சக்கணக்கான ஏழை மகளிர் கலைஞர் ஆட்சியில் பயனடைந்தனர். இந்த திட்டங்களின் பெயர்கள் சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் மற்றும் சாதித்த பெண்கள் பெயர்களை வைத்து அடுத்த தலைமுறையினருக்கு இவர்கள் பற்றிய ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தியவர் கலைஞர்.

ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள பெற்றோரில் எவரேனும் ஒருவர் 35 வயதுக்கு முன்னதாக குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தை பெயரில் 22,000 ரூபாய் வைப்புத் தொகையும், இரு பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு குழந்தை பெயரில் 15000 ரூபாய் வைப்புத் தொகையும் கழக அரசியல் வழங்கப்பட்டது. பெண் குழந்தைகள் சுமை என்ற நிலையை சமூகத்தில் மாற்றிக் காட்டியவர் கலைஞர்.

2006 திமுக ஆட்சியில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச தரிசு நிலங்கள் வழங்குவதென முடிவு செய்தபோது, தலைவர் கலைஞர் அவர்கள் அந்த நிலங்களை அந்தந்த குடும்பத்தின் பெண்கள் பெயரில் வழங்கி பெண்களுக்கு குடும்பத்தில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்  கொடுத்தார் கலைஞர். பெண்களுக்கு தங்கள் பெயரில் சொத்து இருக்கும்போது அது மிகுந்த தன்மைபிக்கை தரும் என்ற அடிப்படையில் அதனை நிறைவேற்றிக்காட்டியவர் கலைஞர்.

மகளிர் சுய உதவிக் குழு

பெண்கள் தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும்  நிற்க வேண்டும். என்பதற்காக 1989-ம் ஆண்டு கலைஞர் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் ஆதகம்பாடி எனும் ஊருக்கருகில் உள்ள காட்டுக் கொட்டகை எனுமிடத்தில் மாரியம்மன் மகளிர் மன்றம் எனும் பெயரில் குப்பம்மாள் என்பவர் தலைவராகவும், ஜெயலட்சுமி  துணைத் தலைவராகவும் கொண்ட மகளிர் சுய உதவிக் குழு ஒன்றை முதன் முதலாக 23.7.1990 அன்று தொடங்கி வைத்தார் என்பது வரலாறு.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்காகவே மாவட்டங்கள் தோறும் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. மாநில அளவில் நிரந்தர சந்தைக்காக வள்ளுவர் கோட்டம் அருகில் 10 கோடி ரூபாய் செலவில் நவீன பலமாடி மாளிகை ஒன்றைக் கட்டி அந்த கட்டிடத்திற்குக் கலைஞர் அவர்கள் அன்னை தெரசா மகளிர் வளாகம் எனப் பெயரிட்டுத் திறந்து வைத்தார்கள்.

கலைஞர் பெண் வீராங்கனைகளை எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பதற்கு எடுத்துக்காட்டு தடகள வீரர் சாந்தி. 2006ல், தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக, தமிழக அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் பணமும், 1 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சி பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டது ; வழங்கியவர் தலைவர் கலைஞர்.

இந்தப்  பரிசு பெறுவதற்கு ஒரு நாள் முன்னர் தான், பாலினச்  சோதனையில் சாந்தி தோல்வியுற்று,அவரின் பதக்கம் பறிக்கப்பட போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதிகாரிகள் ஏதோ சொல்லப்போக, “ஓடியது இந்தக் கால்கள் தானே”என்று சொல்லி வாயடைத்து அந்த பணத்தை சாந்தி அவர்களுக்கு வழங்கியவர் கலைஞர்.

இப்படி எண்ணற்ற திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை சமூகத்தில் உயர்த்திக் காட்டியவர் கலைஞர் அவர்கள். சட்டங்கள் பெண்களுக்கு வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தந்தாலும் , வாழ்க்கை பாதுகாப்பு கல்வி மூலமும் , தொழில்முனையும் ஏற்பாடுகள் மூலமும், சொத்துரிமை மூலமும் ஏற்படுத்தி தந்தவர் கலைஞர்.

 #கலைஞர்கருணாநிதி #HBDKalaingar97

– வழக்கறிஞர் கனிமொழி, யு.எஸ்.ஏ.

From around the web