கலைஞர் ஒரு போராளி!!

ஆங்கிலேய அரசு, அப்போதைய காலகட்டத்தில் அலுவல் நடைமுறைகளுக்காகவும், ஆளுகைவசதிக்காகவும், நிலப்பரப்புகளை மாகாணங்களாக உருவாக்கியது. மாகாண உருவாக்கங்களின் அடிப்படை இதுவேயன்றி பண்பாட்டு ஒற்றுமையோ, புவியியல் தொடர்போ அல்ல. அதுவே ‘பிரிட்டிஷ்இந்தியா’ எனவும் அழைக்கப்பட்டது. அதன் நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசுச் சட்டம், 1935. காங்கிரஸ் கட்சியே பல்வேறு காரணங்களுக்காக இச்சட்டத்தை வரவேற்கவில்லை என்பது கவனித்தகுந்தது. இருந்தாலும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், மாநில – மத்திய அரசுகளுக்கான அதிகார ஒதுக்கீடு/பகிர்வு, இந்தியஅரசுச் சட்டம்
 

கலைஞர் ஒரு போராளி!!ங்கிலேய அரசு, அப்போதைய காலகட்டத்தில் அலுவல் நடைமுறைகளுக்காகவும், ஆளுகைவசதிக்காகவும், நிலப்பரப்புகளை மாகாணங்களாக உருவாக்கியது. மாகாண உருவாக்கங்களின் அடிப்படை இதுவேயன்றி பண்பாட்டு ஒற்றுமையோ, புவியியல் தொடர்போ அல்ல. அதுவே ‘பிரிட்டிஷ்இந்தியா’ எனவும் அழைக்கப்பட்டது. அதன் நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசுச் சட்டம், 1935. காங்கிரஸ் கட்சியே பல்வேறு காரணங்களுக்காக இச்சட்டத்தை வரவேற்கவில்லை என்பது கவனித்தகுந்தது. இருந்தாலும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், மாநில – மத்திய அரசுகளுக்கான அதிகார ஒதுக்கீடு/பகிர்வு, இந்தியஅரசுச் சட்டம் 1935 மாதிரியில்/அமைப்பில் உருவானது என்பது குறிப்பிடதக்கது. அதுவே முதல்கோணலும் ஆகும்.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி

1963, இந்திய – சீனப்போர் முடிவில், தனிநாடு கோரிக்கைகளை தடை செய்யும் அரசியலமைப்பு16ஆம் சட்டத்திருத்த மசோதா, சட்டமாகிறது. சுவரின்றி சித்திரமில்லை என்பதை உணர்ந்த பேரறிஞர் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை விடுத்து “மாநில சுயாட்சி” முழக்கத்தை முன்வைக்கிறார்.

பேரறிஞர் அண்ணா கூறுகிறார், “வலிமையான மத்திய அரசே மக்களுக்கான திட்டங்களை கொண்டு சேர்த்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்பது ஒரு கட்டுக்கதை. அந்த வலிமை எதற்காக? யாருக்காக? மாநில மற்றும் மத்திய அரசை தேர்ந்தெடுப்பது ஒரே மக்கள்தாம். இரு அரசுகளுமே மக்களுக்கு பதிலளிக்ககடமைப்பட்டன. பகைநாடுகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பது மத்தியஅரசின் பொறுப்பு. சமூக மற்றும் பொருளாதாரத் தளங்களில் அதிகாரப் பரவல் மூலம் வலிமையான மாநில அரசுகளே, மத்தியஅரசுக்கு வலு சேர்த்திட முடியும். இதன் மூலமே நாட்டு வளர்ச்சிக்கு எதிரான, தடைப்படுத்தும் அறைகூவல்களைச் சந்திக்க இயலும்;  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறைகூவல்கள் உட்பட.”

பிப் 10,1969 தமிழக முதல்வராக முதன்முறை பதவி ஏற்கிறார் கலைஞர். பதவி ஏற்ற ஏழே மாதங்களுக்குள் செப் 2, 1969, அரசு நடவடிக்கையாக, மாநில – மய்ய அரசுகள் உறவாடல் குறித்து ஆராயவும், மாநிலசுயாட்சி குறிக்கோளை நோக்கிய சட்டத் திருத்தங்களை பரிந்துரைக்கவும் நீதிபதி இராஜமன்னார் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். இன்றளவிலும் மாநிலசுயாட்சி பேசுகையில் கலைஞரையும் இராஜமன்னார்குழு அறிக்கையையும் முன்னிறுத்தித்தான் வாதிட முடியும்.

அரசு நடவடிக்கைமட்டுமல்ல கட்சி நடவடிக்கையாக இரா. செழியன்,கு.சா. ஆனந்தன் மற்றும் முரசொலிமாறன் ஆகியேரை கொண்ட குழுவையும் அமைக்கிறார். அவர்கள் பணி இராஜமன்னார்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பது. இவ்வறிக்கைகளின் அடிப்படையில் 1974 மாநிலசுயாட்சி தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றுகிறார் கலைஞர்.

பேரறிறிஞர் வழிகாட்டினார்; கலைஞர் பாதை அமைத்தார்

கலைஞர் ஒரு போராளி!!கலைஞர்  – ஒரு போராளி

தமிழர் வாழ்வியலை பொருத்தமட்டில், பண்பாட்டு அடிப்படையிலான மொழியும், மொழியின் அடிப்படையிலான பண்பாடும்  ஒட்டிப்பிறந்த இரட்டையர். இந்த அடையாளங்களை வெளிபடுத்த, பறைசாற்ற கூட்டாட்சிமுறை சிறப்பான வாய்பை அளிக்கும். இனத்தாலும், மொழியாலும் பல்வேறு காரணிகளாலும் வேறுபட்டமக்கள் இணக்கமாக இருத்தலின் மூலமும் சகிப்புத்தனமையுடன் இருப்பதன் மூலமும்   அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துதலே கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையாகும். அண்ணாவின் கருத்துகளை முழுவதும் உள்வாங்கிய கலைஞர்,  கோரிக்கைகளை முன்நகர்த்திச் சென்றார்.

கலைஞரது இடையராத போராட்டமும், உரிமை வேட்கையும் இந்திய அளவில் பலரது பார்வையை, கவனத்தை ஈர்த்தது. கலைஞரின் தலைமையில் நடந்த மாநில சுயாட்சி மாநாட்டில் தந்தைபெரியார்,  காயிதேமில்லத், கேரளாவைச் சேர்ந்த சோஷலித்தலைவர் அரங்கில்சிறீதரன், மேற்குவங்க முதல்வர் அஜய்முகர்ஜி, பிரணாப்முகர்ஜி மற்றும் பல தலைவர்களும், நாடாளுமன்றவாதிகளும் கலந்துகொண்டு மாநிலசுயாட்சி பேசியது , அவரது ஆளுமைக்கும் , பங்களிப்பிற்குமான சான்று. தேசிய ஒருங்கிணைப்பு என்ற பெயரில் ஒருபகுதி மற்றொருபகுதியின் மேல்ஆதிக்கம் செலுத்துவதை தீவிரமாக எதிர்த்தார். வேளாண்மை, கல்வி, மருத்துவம் ,பொதுப்பணி, சிறுதொழில்கள் போன்ற துறைகளுக்கு மாநிலத்தில் தனி அமைச்சகங்கள் இருக்கும்பொழுது மத்தியிலும் இயங்குவது மிகையானது என்பதை பல்வேறு தருணங்களில் கலைஞர் எடுத்துரைத்தார்.

“நான் பிரிவினைவாதி அல்ல. நான் மாநில சுயாட்சி கோருவதன் மூலம் ஒன்றிணைந்த, ஒருங்கிணைந்த, வலிமையான இந்தியாவை விரும்புகிறேன். அதை எதிப்பவர்களே பிரிவினைவாதிகள். அவர்கள் டெல்லி சர்வாதிகார போக்குடனும், இந்தியை தேசியமொழியாக ஆக்கும் நோக்குடனும் செயல்படுபவர்கள். தமிழகத்தின் செயல்பாட்டை டெல்லி தீர்மானிக்க வேண்டும் என்ற நிலை உடையவர்கள். அவர்களுக்கு தமிழகம் பற்றியோ தமிழர்கள் பற்றியோ கிஞ்சுத்தும் கவலை இல்லை” என்று கலைஞர் முழங்கினார்

கலைஞர் ஒரு போராளி!!கலைஞர் – ஒரு நிர்வாகி

ஒரு போராளி, தன் நிலம் சார்ந்த, நிலத்தின் மக்கள் சார்ந்த உரிமைகளுக்கு போர்க்களத்தில் போரிடுவது என்பதே இயல்பு. ஆனால் அந்தப் போராளி, நிர்வாகியாகவும், அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராகவும் சிறப்புடன் செயல்படுவது என்பது வரலாற்றில் மிகச் சிலருக்கே சாத்தியப்பட்டது.

மாநிலசுயாட்சி கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும் அதே வேளையில், இருக்கும் அதிகாரங்களைக் கொண்டு பல்வேறு துறைகளிலும், தளங்களிலும், தமிழ்நாடு  முதன்மை மாநிலமாக முன்னேற்றிய வரலாறு பலஆய்வுமாணவர்களாலும் , பொருளாதார தத்துவயிலாளர்களாலும், அறிஞர்களாலும் வியப்புடன் ஆராயப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.

மாநிலசுயாட்சி , மக்களாட்சியே!

மாநிலசுயாட்சி என்பது மாநில –  மத்தியஅரசுகள் இடையிலான விரோதப் போக்கு அல்ல. அதன் அடிப்படை மக்கள் நலனே, மக்களின் முன்னேற்றமே, மக்களின் ஆட்சியே, என்பதை கலைஞரை போல் எடுத்துச் சொன்னவர் எவரும் இல்லை.

1974-இல் அலாகாபாத் நீதிமன்றம், தேர்தல் முறைகேடு காரணமாக, இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. ஜெய்பிரகாஷ் நாரயன் உட்பட பலர் கிளர்ச்சி செய்கிறார்கள். இந்திராகாந்தியின் தலைமையிலான அரசை, நீக்கமுயற்சிகள் நடைபெறுகின்றன. மத்தியஅரசுடன் பல்வேறு பிரச்சினைகளில், மய்ய அரசுடன் எதிர்நிலையில் இருந்த கலைஞர், கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பவர் அல்ல. ஆழ்ந்த ஜனநாயகவாதி. “இந்திராகாந்தி நீதிமன்ற உத்தரவை மதித்து முன்னுதராணமாக செயல்பட வேண்டும்” என்று அறிக்கை அளிக்கிறார். அதேசமயம் இந்திராகாந்தி அரசைகவிழ்க்கும் முயற்சிகளில் தி.மு.கழகம் ஈடுபடாது ,  ஒத்துழைக்காது” என்று அறிவிக்கிறார்.” மக்களால் அய்ந்து ஆண்டுகள் ஆட்சிசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது அறநெறிக்குப் புறம்பானது மட்டுமல்ல, ஜனநாயக நெறிமுறைக்கும் ஏதிரானது” என்றார்.

1975-இல், இந்திராகாந்தி, அவசரநிலை அறிவித்தார். மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்தனர். இந்த மக்கள் விரோத நடவடிக்கையை சமரசமின்றி முதன்மையாக முன்னின்று கலைஞர் எதிர்த்தார். இந்திய மக்கள் அனைவரும் அல்லல்பட்ட அந்த தருணத்தில் தமிழக மக்களை எவ்வித பாதிப்பும் நெருங்காவண்ணம் அரண் அமைத்தார். அவசரநிலை எதிர்ப்பின் கோட்டையாக தமிழகம் திகழ்ந்தது.

இந்த வரலாற்று நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீதும் அதன் மூலமான மக்கள் நலன் மீதும் கலைஞர் கொண்டிருந்த புரிதலும் பற்றும் அளப்பறியது.

கலைஞர் ஒரு போராளி!!முடிவுரை அல்ல, தொடர்பணியே!

கடந்த அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக தொடந்து நடைபெறும் போரில், போரட்டவடிவங்களும், சூழ்நிலைகளும் மாறியுள்ளன. கோரிக்கையின்கருவும், நியாயமும் இன்றளவும் நிலைத்துள்ளன. இந்த வரலாற்றுக் கண்ணாடி அணிந்து பார்த்தால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் நீட் எதிர்ப்புப் போராட்டம் வரையில் நிலவிடும் நியாயத்தின் ஆழத்தை அது உள்ளபடி காட்டும். அதே அடிப்படையில் கலைஞரது பங்களிப்பும், அயராத உழைப்பும் தன்னலம் கருதா அர்ப்பணிப்பும், தன்னிகரில்லா தலைமையும் மாண்பும் முழுமையாகப் புலப்படும்.

இங்கிருந்து எங்குசெல்ல வேண்டும் என்பதை அறிய, எங்கு தொடங்கி, எதனால் இங்கு வந்து இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாம் பெற்ற உரிமைகளை , கடந்த சில ஆண்டுகளாக இழந்து வரும் சூழல் ,   மாநில சுயாட்சியின் தேவையை படம்பிடித்துக் காட்டுகிறது. இழந்ததை மீட்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும், பெற வேண்டிய உரிமைகளை அடையவும்  , ஒரே துணை கலைஞர் முன்மொழிந்த மாநில சுயாட்சியே என்பது காலம் நமக்கு கோடிட்டுக் காட்டும் உண்மை

நாம் கலைஞருக்கு ஆற்றும் நன்றி என்பது மாநில சுயாட்சிக் கோரிக்கையை தூக்கிப் பிடித்து, மாநில சுயாட்சி வேட்கையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்வதே! நிச்சயம் கலைஞர் கண்ட மாநில சுயாட்சி வந்தே தீரும்.  மாநில சுயாட்சியின் நடைமுறையில் என்றென்றும் கலைஞர் நிலைத்து  நிற்பார்; உரிமை மீட்பு நாயகராக வாழ்ந்து கொண்டே இருப்பார்!

#கலைஞர்கருணாநிதி #HBDKalaingar97

– கார்க்கி குமரேசன் , சான் பிரான்ஸிஸ்கோ, கலிஃபோர்னியா

A1TamilNews.com

 

 

From around the web