காற்று வெளியிடை விமர்சனம்

மணிரத்னத்துக்காகவே படம் பார்க்க வேண்டும் என்ற ஒரு கூட்டம் இருக்கிறது. அவரும் அதை மனதில் வைத்தோ என்னமோ ஒரே மாதிரி படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். நாயகன் கார்த்தி ஏர்போர்ஸ் பிரிவில் பைட்டர் பைலட்டாக வேலை செய்கிறார். போரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் போது எதிர் அணியினரால் கார்த்தியின் விமானம் வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் கார்த்தி. சிறையில் கார்த்தியின் காதல் ப்ளாஷ் பேக்… ஒரு விபத்தில் கார்த்தி அவசரப் பிரிவில் மருத்துவமனையில்
 

காற்று வெளியிடை விமர்சனம்
மணிரத்னத்துக்காகவே படம் பார்க்க வேண்டும் என்ற ஒரு கூட்டம் இருக்கிறது. அவரும் அதை மனதில் வைத்தோ என்னமோ ஒரே மாதிரி படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

நாயகன் கார்த்தி ஏர்போர்ஸ் பிரிவில் பைட்டர் பைலட்டாக வேலை செய்கிறார். போரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் போது எதிர் அணியினரால் கார்த்தியின் விமானம் வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் கார்த்தி.

சிறையில் கார்த்தியின் காதல் ப்ளாஷ் பேக்…

ஒரு விபத்தில் கார்த்தி அவசரப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கிறார் மருத்துவராக வரும் நாயகி அதிதி. வழக்கம் போல் நாயகியை பார்த்ததும் நாயகன் காதல் வயப்படுகிறார்.

சில நாட்களில் நாயகிக்கும் கார்த்தி மீது காதல் ஏற்பட கெஞ்சல், கொஞ்சல், சண்டை, ஊடல், பாடல் என சில காலம் கடக்கிறது. திருமணத்திற்கு முன்பே அதிதி குழந்தைக்கு தாயாகிறார். அந்த கருவை ஏற்க கார்த்தி மறுக்க, கோபத்தில் கண் காணாத இடத்திற்கு சென்று விடுகிறார் அதிதி.

அதே சமயத்தில் போரில் கார்த்தியும் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட, இறுதியாக பாகிஸ்தான் சிறையில் இருந்து கார்த்தி தப்பித்தாரா.? அதிதியை கண்டுபிடித்தாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

மீசையில்லாத கார்த்தியின் சிரிப்பும், அஷ்ட கோணல் முக பாவனைகளும் நமக்கு ஏக அலர்ஜியாக இருக்கிறது. கார்த்திக்கு இந்தப் படமும் கதையும் சுத்தமாக செட் ஆகவில்லை.

அதிதி நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அந்த வட இந்திய முகச் சாயல் மனசுக்குள் வரவிடாமல் துரத்துகிறது.

உயிரைக் கொல்லும் ஒருவன், உயிரைக் காப்பாற்றும் ஒருத்தி. இருவருக்குமான காதல் தான் இந்த காற்று வெளியிடை. கார்த்தியின் பாத்திரமே குழப்பம்தான். திருமணத்திற்கு முன்பே ஊடல், குழந்தை என்பதை ஒரு பேஷனாகவே இந்த படத்தில் முன் வைத்திருக்கிறார் இயக்குநர் (தவிர்த்திருக்கலாம்).

படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவு மட்டுமே. ரவி வர்மனின் கேமரா காட்சிகள் அனைத்தையும் ரசிக்க வைக்கிறது. இந்தியாவில் இப்படிபட்ட இடங்களெல்லாம் இருக்கிறதா என்பதை கண் வியந்து பார்க்கும் அளவிற்கு ரம்மியமான காட்சிகளை கொடுத்திருக்கிறார் ரவி.

மற்றொரு பலம் ஏ ஆர் ரகுமான். பின்னனி இசை, பாடல்கள் இரண்டுமே சோடை போகவில்லை. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதி சிறிது தொய்வு.

காற்று வெளியிடை – இயக்குநர் மணிரத்னத்திற்கான காதலர்கள் கூட்டத்துக்காக மட்டுமே!

From around the web