காற்றின் மொழி… ஜோதிகா மேடம், எங்களப் பாத்தா பாவமா இல்லியா?

நடிகர்கள்: ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்ச், குமரவேல், எம்எஸ் பாஸ்கர் ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி இசை: ஏஎச் காஷிப் இயக்கம்: ராதாமோகன் எந்தக் கவலையும் இல்லாத, ஒரு சொகுசான நடுத்தர வர்க்க குடும்பத் தலைவி ஜோதிகாவுக்கு திடீரென ரேடியோ ஜாக்கியாகும் ஆசை வருகிறது. ஒரு எஃப்எம்மில் ரூ 30 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்குச் சேருகிறார். ‘மதுவோடு பேசலாம்’ என்ற நிகழ்ச்சி ஆர்ஜே ஆகும் ஜோதிகா, நேயர்களுக்கு அந்தரங்க ஆலோசனைகள் சொல்ல ஆரம்பிக்க, குடும்பத்துக்குள் அதுவே புயலைக் கிளப்புகிறது.
 

காற்றின் மொழி… ஜோதிகா மேடம், எங்களப் பாத்தா பாவமா இல்லியா?

டிகர்கள்: ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்ச், குமரவேல், எம்எஸ் பாஸ்கர்

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி

இசை: ஏஎச் காஷிப்

இயக்கம்: ராதாமோகன்

எந்தக் கவலையும் இல்லாத, ஒரு சொகுசான நடுத்தர வர்க்க குடும்பத் தலைவி ஜோதிகாவுக்கு திடீரென ரேடியோ ஜாக்கியாகும் ஆசை வருகிறது. ஒரு எஃப்எம்மில் ரூ 30 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்குச் சேருகிறார். ‘மதுவோடு பேசலாம்’ என்ற நிகழ்ச்சி ஆர்ஜே ஆகும் ஜோதிகா, நேயர்களுக்கு அந்தரங்க ஆலோசனைகள் சொல்ல ஆரம்பிக்க, குடும்பத்துக்குள் அதுவே புயலைக் கிளப்புகிறது. அதிலிருந்து எப்படி மீண்டது ஜோ குடும்பம் என்பதுதான் மீதிக் கதை.

தனக்கான கதை, தன்னைவிட வயது குறைந்த, தன் அனுமதி மீறி தொடக்கூடத் துணியாத ஹீரோ.. என தன் செகன்ட் இன்னிங்ஸ் சினிமாவுக்கு தனி வரையறை வைத்திருக்கிறார் ஜோதிகா. இந்தப் படத்தையும் அந்த வரையறையை மீறாமல் எடுத்துக் கொடுத்திருக்கிறார் ராதாமோகன்.

காற்றின் மொழி… ஜோதிகா மேடம், எங்களப் பாத்தா பாவமா இல்லியா?

ஜோதிகா நல்ல நடிகையாக இருக்கலாம்… ஆனால் கொடுத்த காசுக்கு மேல் கூவுகிற மாதிரிதான் பல காட்சிகளில் செயற்கைத்தனம் காட்டி கடுப்படிக்கிறார். எப்போது பார்த்தாலும் முழியைக் காட்டி பயமுறுத்துகிறார். காமெடி என்று நினைத்து அவர் பண்ணும் எல்லா காட்சிகளிலும் ‘மாயா பஜார்’ அல்லது ‘சிவா மனசுல சக்தி’ ஊர்வசிதான் நினைவுக்கு வருகிறார்.

கைக்கு அடக்கமான ஹீரோ வேண்டும் என்று தேடியவர்களுக்கு தோதாகக் கிடைத்திருக்கிறார் விதார்த். ஜோதிகாவை விட இயல்பாகவே நடித்திருக்கிறார். என்ன… பல காட்சிகளில் ஜோதிகாவின் தம்பி மாதிரிதான் தெரி்கிறார். 

மற்றபடி ராதாமோகனின் நிலைய வித்வான்கள் குமரவேல், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் கதைக்கு இவர்களின் அவசியம் என்ன இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.

ஜோதிகாவை விட பளிச்சென்று இருக்கிறார் அந்த எப்எம் ஹெட்டான லட்சுமி மஞ்ச். ஒரு காட்சியில் வந்தாலும் சிம்பு கைத்தட்டல் பெறுகிறார். காரணம் அந்தக் காட்சி சிம்புவின் ஒரிஜினல் குணத்தைச் சுட்டிக்காட்டுவதால்!

மனோபாலா, மயில்சாமியையெல்லாம் இரட்டை அர்த்த வசனம் பேசுவதற்கென்றே படத்தில் திணித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. 

இசை, ஒளிப்பதிவில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை.

காற்றின் மொழி… ஜோதிகா மேடம், எங்களப் பாத்தா பாவமா இல்லியா?

36 வயதினிலே மாதிரி டெம்ப்ளேட்டே தனது அடுத்த கட்ட சினிமா பயணத்துக்குப் போதுமானது என நினைத்துவிட்டார் போலிருக்கிறது ஜோதிகா. அது அவர் தனிப்பட்ட விருப்பம், வசதி. அதை ரசிகர்கள் மீது தொடர்ந்து திணித்துக் கொண்டிருந்தால், திகட்டிவிடாதா!

மொழி என்ற க்ளாஸ் படம் தந்த ராதாமோகன் தொடர்ந்து ரீமேக்கில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருப்பதையும் ரசிக்க முடியவில்லை.

Rating: 2.0/5.0

From around the web