காலா சேட்டு செம வெயிட்டு – அமெரிக்காவிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட் 

“நிலமே எங்கள் உரிமை” இதுதான் படத்தின் டேக் லைன். குடும்பம், வசதி எல்லாம் இருந்தும் தான் வளர்த்த மண்ணிலே இருந்து இறக்க நினைக்கும் ‘காலாசேட்டு’ ரஜினிகாந்த் – தாராவி மக்களின் காவலர்.முதல் காட்சியிலே கதை ஆரம்பித்து விடுகிறது, பின்னர் அழகான காட்சி அமைப்புகளின் மூலம் ரஞ்சித் கேரக்டர்’களை அறிமுகம் செய்யும் விதம் அட ரகம். குறிப்பாக ரஜினி ஹுமா’வை சந்திக்கும் இருள் காட்சி. ரஜினி, ஹுமா ஃப்ளாஷ்பேக் சொன்ன விதம் சிறப்பு. ஈஸ்வரி
 
  காலா சேட்டு செம வெயிட்டு – அமெரிக்காவிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட் 
 
நிலமே எங்கள் உரிமை” இதுதான் படத்தின் டேக் லைன். குடும்பம், வசதி எல்லாம் இருந்தும் தான் வளர்த்த மண்ணிலே இருந்து இறக்க நினைக்கும் ‘காலாசேட்டு’  ரஜினிகாந்த் – தாராவி மக்களின் காவலர்.முதல் காட்சியிலே கதை ஆரம்பித்து விடுகிறது, பின்னர் அழகான காட்சி அமைப்புகளின் மூலம் ரஞ்சித் கேரக்டர்’களை அறிமுகம் செய்யும் விதம் அட ரகம். குறிப்பாக ரஜினி ஹுமா’வை சந்திக்கும் இருள் காட்சி. 
 
ரஜினி, ஹுமா ஃப்ளாஷ்பேக் சொன்ன விதம் சிறப்பு. ஈஸ்வரி ராவ் – ரஜினி அருமையான ஜோடி, காட்சிகளில் சிறப்பான இயல்பான நடிப்பு. ‘தூய மும்பை’ எனும் திட்டம் மூலம் தாராவியை மொத்தமாக முழுங்க நினைக்கும் ஹரி தாதா  நானா படேகர். இவர் இந்த படத்தின் இன்னொரு ஹைலைட். ரஜினியும் இவரும் மோதும் காட்சிகள் பட்டாசு ரகம். ரஜினியை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கும் காட்சி, காலாவை சந்தித்து விட்டு தாராவிக்கு வெளியே செல்ல முற்படும் காட்சி என அதகளம்.இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
 
எளிமையான கதை என்றாலும் வலிமையான திரைக்கதை மூலம் படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் கொடுத்துள்ளார் ரஞ்சித். முதல் பாதி ஸ்லோ என்றாலும் ரசிக்கும் ரகம். தன்னுடைய கிளாசிக் டச்’சை விட்டுவிடாமல் ரஜினியின் மாசை காண்பித்துள்ளார் மிக திறமையாக. பலமான கேரக்டர்’களும், அருமையான காஸ்டிங்கும் படத்தின் பெரிய பலம். வசனங்கள் இன்றைய அரசியல் சூழலை அருமையாக பதிவிடுகிறது, அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி!
   
படத்தில் முக்கியமாக பாராட்ட வேண்டியது ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் முரளி. தாராவி காட்சிகள் செட் என்பதை நம்ப முடியவில்லை. முரளி அருமையான சவாலான  சினிமாட்டோகிராபி மூலம் கட்டிபோடுகிறார். தினேஷ் சுப்பாராயன் மழை சண்டை காட்சிகள், கிளைமாக்ஸ் சண்டை என மிரட்டி விட்டார். இசையும் பின்னணி இசையும் மிக அருமை. சந்தோஷ் நாராயணனுக்கு ஒரு “அட!” போடலாம்.
 
படத்தின் சிறிய குறைகளை விட்டு தள்ளும் அளவிற்கு பல நிறைகள் உள்ளன. ஆழமான கருத்துக்களை ரஜினி’யின் மூலம் பேச வைத்துள்ள ரஞ்சித், தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் என்பதே நிதர்சனம். ஆனால் படம் ரஜினியின் அரசியலுக்கு உதவுமா என்பதை வெயிட் பண்ணிதான் பார்க்க வேண்டும். சினிமாவின் அளவில் “செம வெயிட்டு” இந்த காலா சேட்டு. தயாரிப்பாளர் தனுஷுக்கு  மாபெரும் வெற்றிப் படம்.
 
– சுப்ரமணியன்
 

From around the web