ஜூங்கா விமர்சனம்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, சாயிஷா, சுரேஷ் மேனன், யோகி பாபு இசை: சித்தார்த் விபின் ஒளிப்பதிவு: டட்லி தயாரிப்பு: விஜய் சேதுபதி, அருண்பாண்டியன், ஐசரி கணேஷ், ஆர் எம் ரமேஷ்குமார் இயக்கம்: கோகுல் வெள்ளிக்கிழமை நாயகன் விஜய் சேதுபதியின் அடுத்த படம் ஜூங்கா. விஜய் சேதுபதிக்கு கதை ஞானம் உண்டு, நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்குபவர் என இன்டஸ்ட்ரியில் ஒரு பெயர் உண்டு. ஆனால் அதில் உண்மை உள்ளதா என கேட்க வைக்கும் படம் இந்த ஜூங்கா. அதே
 

ஜூங்கா விமர்சனம்

டிகர்கள்: விஜய் சேதுபதி, சாயிஷா, சுரேஷ் மேனன், யோகி பாபு

இசை: சித்தார்த் விபின்

ஒளிப்பதிவு: டட்லி

தயாரிப்பு: விஜய் சேதுபதி, அருண்பாண்டியன், ஐசரி கணேஷ், ஆர் எம் ரமேஷ்குமார்

இயக்கம்: கோகுல்

வெள்ளிக்கிழமை நாயகன் விஜய் சேதுபதியின் அடுத்த படம் ஜூங்கா. விஜய் சேதுபதிக்கு கதை ஞானம் உண்டு, நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்குபவர் என இன்டஸ்ட்ரியில் ஒரு பெயர் உண்டு. ஆனால் அதில் உண்மை உள்ளதா என கேட்க வைக்கும் படம் இந்த ஜூங்கா. அதே போல கிடைக்கிற பொன்னான வாய்ப்புகளை கோட்டைவிடுவது எப்படி என்பதில் மாஸ்டர் டிகிரி வாங்குபவர் இந்த கோகுல்!

கதை இதுதான்.

ரங்கா மகன் லிங்கா.. லிங்கா மகன் ஜூங்கா. தன் தாத்தாவும் அப்பாவும் கோட்டைவிட்ட ‘சினிமா பாரடைஸ்’ தியேட்டரை மீண்டும் கைப்பற்றி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க, கஞ்ச டானாகி, கிடைக்கிற அசைன்மென்டையெல்லாம் செய்து, ஒரு கோடி ரூபாய் தேற்றுகிறார். ஆனால் அதைக் கொண்டுபோய்க் கொடுத்து தியேட்டரை விலைக்குக் கேட்டால் வில்லங்கம் செய்கிறார் புதிய ஓனர் செட்டியார். அவருக்கு ஒரு மகள். பாரீஸில் படிக்கிறாள். அவளை கடத்தி வைத்து, தன் சொத்தை மீட்கத் திட்டமிடுகிறான் ஜூங்கா… அதில் ஜெயித்தானா என்பது க்ளைமாக்ஸ்.

ஜூங்கா விமர்சனம்

ஜூங்காவாக விஜய் சேதுபதி. ஏதோ புதிதாக செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் பார்வையாளர்களைக் கவரவில்லை அந்த முயற்சி. அவரது தலை முடி, மீசை, குறுந்தாடி என எல்லாமே படு செயற்கை. நடிப்பிலும் பெரிதாகக் கவரவில்லை. எப்போது பார்த்தாலும் பேசிக் கொண்டே இருக்கிறார். அடித் தொண்டையில் கத்துகிறார். யோகி பாபு இருந்தும் சிரிப்பே வரவில்லை.

நாயகியாக சாயிஷா. அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பயாலஜி எதுவுமே செட் ஆகவில்லை… குலோப்ஜாமுன் மீது சால்னா கொட்டியதைப் போல!

மற்ற நடிகர்களில் யோகி பாபு கவனிக்க வைத்தாலும், எந்தக் காட்சியிலும் சிரிப்பு வரவில்லை.

பாரிஸின் மைனஸ் 5 டிகிரி குளிர் நிலவும் ஆற்று நீரில் நீந்தியே 300 மைல் தூரத்தை விஜய் சேதுபதி கடக்கிறார் எனும்போதே, இந்தப் படத்தின் ரேஞ்ச் என்ன என்பது புரிந்துவிடும். பாரிஸின் வெளிப்புறப் பகுதிகளில் நடக்கும் சேஸிங்கெல்லாம் காதுல பூ சுத்தும் ரகம். இந்தக் காட்சிகளையெல்லாம் பிரான்ஸ் போலீஸ் பார்த்தால், இன்னொரு முறை எந்தத் தமிழ்ப் பட ஷூட்டிங்குக்கும் அனுமதியே தரமாட்டார்கள்.

ஜூங்கா விமர்சனம்

சரண்யாவும், அந்த டான் பாட்டியும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்துகிறார்கள். சாயிஷா அறிமுகமாகும் அந்தப் பாடல் காட்சியையும் ரசிக்கலாம். பாரிசுக்குப் போகும்வரை ஏதோ பார்க்கும்படி இருந்த காட்சிகள், பாரிசுக்குப் போன பிறகு படுத்துவிடுகிறது.

கேமரா ஓகே.. இசையில் எந்த ஈர்ப்பும் இல்லை.

ஜூங்கா… நேரத்துக்கும் பொறுமைக்கும் வைக்கப்பட்ட பெரிய சோதனை!

Rating: 1.5/5.0

– வணக்கம் இந்தியா

From around the web