காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, என்ஆர்சி, சிஏஏ விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிர்ப்பு! அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் திட்டவட்டம்!!

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, என்ஆர்சி, சிஏஏ தொடர்பான விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்! காஷ்மீரிகளின் அனைத்து உரிமைகளையும் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஜோ பைடன், சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் தொடர்பான தனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அமெரிக்கர்களுக்கு ஜோ பைடனின் கொள்கைகள் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள ஜோ பைடன் இந்த கருத்துக்களை அதில் தெரிவித்துள்ளார். இந்து அமைப்புகளைச்
 

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, என்ஆர்சி, சிஏஏ விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிர்ப்பு! அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் திட்டவட்டம்!!காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, என்ஆர்சி, சிஏஏ தொடர்பான விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்!

காஷ்மீரிகளின் அனைத்து உரிமைகளையும் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஜோ பைடன், சிஏஏ, என்ஆர்சி சட்டங்கள் தொடர்பான தனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் அமெரிக்கர்களுக்கு ஜோ பைடனின் கொள்கைகள் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள ஜோ பைடன் இந்த கருத்துக்களை அதில் தெரிவித்துள்ளார். 

இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலர் ஜோ பைடன், இந்தியாவுக்கு எதிராக குறிப்பிட்டுள்ள கருத்துகளின் வார்த்தைப் பிரயோகம் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்து அமெரிக்கர்களுக்கும் இத்தகைய கொள்கைகளை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதற்கு ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரக் குழு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கொள்கை அறிவிப்பில், ஜோ பைடன் இந்தியர்களுக்கும், அமெரிக்க இந்தியர்களுக்கும் சிறந்த நண்பராக விளங்குகிறார். அதிபர் ஒபாமாவுடன் எட்டு ஆண்டுகள் துணை அதிபராக பணியாற்றிய போது, வரலாற்று சிறப்பு மிக்க இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஜோ பைடன் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். 

இரு நாடுகளுக்கு இடையே ஆண்டுதோறும் 500 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் ஏற்படவும் முயற்சி மேற்கொண்டார். ஆண்டு தோறும் துணை அதிபர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து கொண்டாடி வந்தார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்களுக்கும், அமெரிக்க இந்தியர்களுக்கும் நண்பன் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள ஜோ பைடன், பிரதமர் மோடியின் ஆட்சியில் நடைபெறும் இந்துத்துவா அரசியலை ஏற்கவில்லை என்பதையும் திட்டவட்டமாக சுட்டிக் காட்டியுள்ளார். 

அதிபர் ட்ரம்ப் போல் இந்தியாவுக்கு உற்ற நண்பர் யாரும் இது வரையிலும் வெள்ளை மாளிகையில் இருந்தததில்லை என்று கிட்டத்தட்ட நேரடியாகவே அமெரிக்க இந்தியர்களிடம் பிரச்சாரம் செய்தார் ஹூஸ்டன் “ஹௌடி மோடி” நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி. 

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க இஸ்லாமியர்களை கவரும் வகையில் ஜோ பைடன் தற்போது கொள்கை அறிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க இந்தியர்களுக்கு இடையே பாஜக சார்பு, பாஜக சார்பு இல்லாதவர்கள் என்ற பிளவு வெளிப்படையாக ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் தேர்தலிலும் அது எதிரொலிகத் தொடங்கி  உள்ளது.

A1TamilNews.com ஸ்பெஷல்

From around the web