மீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்.. கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் போட்டிக்கான உட்கட்சி தேர்தலில் ஜோ பைடனுக்கு மீண்டும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸின் செல்வாக்கு பெருமளவில் குறைந்துள்ளது.ஜனநாயகக் கட்சி சார்பில் 20 பேர் அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 3ம் தேதி அயோவா மாநிலத்தில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக, வேட்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், தொலைக்காட்சி விவாதங்கள் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு விவாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள் துணை
 

மீண்டும் உச்சத்தில் ஜோ பைடன்..  கமலா ஹாரிஸ் செல்வாக்கு சரிவு!வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் போட்டிக்கான உட்கட்சி தேர்தலில் ஜோ பைடனுக்கு மீண்டும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸின் செல்வாக்கு பெருமளவில் குறைந்துள்ளது.ஜனநாயகக் கட்சி சார்பில் 20 பேர் அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடுகிறார்கள். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 3ம் தேதி அயோவா மாநிலத்தில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக, வேட்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், தொலைக்காட்சி விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு விவாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனுக்கு அதிக அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. சி.என்.என் / எஸ்.எஸ்.ஆர்.எஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜோ பைடன் 29 சதவீத ஆதரவு பெற்றுள்ளார். மே மாத இறுதியில் 32 சதவீதமாக இருந்தது, முதல் விவாதத்திற்குப் பிறகு 22 சதவீதமாக ஜூன் மாதம் குறைந்தது. இரண்டாவது விவாதத்திற்குப் பிறகு ஜோ பைடனுக்கு 7 சதவீத ஆதரவு கூடியுள்ளது. அடுத்த நிலையில் உள்ள வேட்பாளரை விட இரட்டை இலக்க வித்தியாசத்தில் உள்ளார்.

அடுத்த நிலையில் பெர்னி சான்டர்ஸ் 15 சதவீதம், எலிசபெத் வாரன் 14 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளனர். இண்டியானா மாநிலத்தின் சவுத் பென்ட் நகர மேயர் பீட் புட்டஜஜ்  5 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளார். வெளிப்படையாக தன்னை ஓரினச் சேர்க்கையாளர் என்று அறிவித்தவர் இவர்.


முதல் விவாதத்தைத் தொடர்ந்து 17 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்தில் இருந்த கமலா ஹாரிஸ், தற்போது 12 சதவீத ஆதரவை இழந்துள்ளார். விவாதத்தில் ஜோ பைடனை கமலா ஹாரிஸ் கடுமையாக தாக்கிப் பேசியது ஜனநாயகக் கட்சியினரால் ரசிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. 5 சதவீத ஆதரவுடன் 5ம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். கமலா ஹாரிஸுக்கு அடுத்த இடத்தில் 3 சதவீத ஆதரவுடன் டெக்சாஸின் பெட்டோ ஓ ரோர்க் உள்ளார்.  கோரி புக்கர்,ஹூலியன் காஸ்ட்ரோ, துள்சி கப்பார்ட் தலா 2 சதவீத ஆதரவு பெற்றுள்ளனர். செப்டம்பர் மாதம் 12, 13, தேதிகளில் ஹூஸ்டன் மாநகரத்தில், ஜனநாயகக் கட்சியின் மூன்றாவது விவாதம் நடைபெற உள்ளது.  தற்போதைய நிலவரப் படி அதிபர் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட, முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனுக்கு பெருமளவில் வாய்ப்பு உள்ளது.- வணக்கம் இந்தியா

From around the web