அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாள்!

அட்லாண்டா: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அமெரிக்காவின் 39வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர் 1977ம் ஆண்டு முதல் 1981 வரை பதவியில் இருந்தார். இரண்டாவது தடவை போட்டியிட்ட போது முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனிடம் தோல்வியுற்றார். முன்னாள் ஹாலிவுட் நடிகர் என்பதால், அமெரிக்க எம்ஜிஆர் என்று தமிழக ஊடகங்களால் அப்போது ரொனால்ட் ரீகன் வர்ணிக்கப்பட்டார். பதவியிலிருந்து விலகியபோது ஜிம்மி கார்ட்டருக்கு வயது 57. அதன் பிறகு கடந்த 38
 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாள்!

அட்லாண்டா: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 

அமெரிக்காவின் 39வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர் 1977ம் ஆண்டு முதல் 1981 வரை பதவியில் இருந்தார். இரண்டாவது தடவை போட்டியிட்ட போது முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனிடம் தோல்வியுற்றார். முன்னாள் ஹாலிவுட் நடிகர் என்பதால், அமெரிக்க எம்ஜிஆர் என்று தமிழக ஊடகங்களால் அப்போது ரொனால்ட் ரீகன் வர்ணிக்கப்பட்டார்.

பதவியிலிருந்து விலகியபோது ஜிம்மி கார்ட்டருக்கு வயது 57. அதன் பிறகு கடந்த 38 வருடங்களாக மனிதநேய சேவகராக, புத்தக ஆசிரியராக, பல்கலைக்கழக பேராசிரியராக,  தேவலாயத்தில் ஞாயிற்றுக்கிழமை வகுப்பு ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.

2002ம் ஆண்டு ஜிம்மி கார்ட்டருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது வரையிலும் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். எமரி பல்கலைக் கழகத்தில் 37 ஆண்டுகளாக பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

1924ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த ஜிம்மி கார்ட்டரின் முழுப் பெயர் ஜேம்ஸ் எர்ல் கார்ட்டர் II என்பதாகும். ஜேம்ஸ் என்ற முதல் பெயர் ஜிம்மி என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. 

தனது 22வது வயதில் ரோசலின் ஸ்மித்-ஐ திருமணம் செய்தார் ஜிம்மி கார்ட்டர். இருவரும் இணைபிரியாத தம்பதிகளாக 72 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றனர். ஜாக், ஜேம்ஸ் III, டானல், ஏமி என்று நான்கு குழந்தைகள் உள்ளனர்.

1943 முதல் 1961 வரை அமெரிக்க ராணுவத்தில் லெஃப்டினென்ட் ஆக பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க ராணுவ வீரராக பங்கெடுத்துள்ளார். 1961 முதல் 1967 வரை ஜார்ஜியா மாநிலத்தில் செனட்டராக இருந்தவர், 1971முதல் 1975 வரையிலும் மாநில கவர்னராகவும் பதவி வகித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாள்!

1976ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட அப்போதைய அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் -ஐ தோற்கடித்து அமெரிக்காவின் 39 வது அதிபர் ஆனார் ஜிம்மி கார்ட்டர்.

அதிபர் காலத்து பொருட்கள், புத்தகங்கள், நினைவுப்பரிசுகள் உள்ளிட்டவைகளிஉடன்  ‘ஜிம்மிகார்ட்டர் அதிபர் நூலகம்’ அட்லாண்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி ஜிம்மி கார்ட்டரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று இந்த நூலகத்திற்கான அனுமதிக் கட்டணம் 99 சென்ட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு மெலனோமோ என்ற கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார் ஜிம்மி கார்ட்டர். ஈரல் மற்றும் முளையில் பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் இம்யூனோ தெரபி மூலம் குணமடைந்தார். நான் இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். ஆனால் நல்லவிதமாக மீண்டு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் “நீண்டநாட்கள் வாழும் முன்னாள் அதிபர்” என்ற பெயருடன் ஜிம்மி கார்ட்டர் 95வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கட்சி சார்பின்றி அனைத்து தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

From around the web