JEE, NEET தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கால் பள்ளி, கல்லூரி மற்றும் போட்டித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு, என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான JEE நுழைவுத்தேர்வுகள் ஐ.ஐ.டி.களில் சேர்வதற்கான JEE அட்வான்ஸ்டு தேர்வுகள் இவை அனைத்தும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த
 

JEE, NEET தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு! மத்திய அரசு அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கால் பள்ளி, கல்லூரி மற்றும் போட்டித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு, என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான JEE நுழைவுத்தேர்வுகள் ஐ.ஐ.டி.களில் சேர்வதற்கான JEE அட்வான்ஸ்டு தேர்வுகள் இவை அனைத்தும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்பது குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் குழப்பம் நிலவி வந்ததால் இது தொடர்பான தெளிவான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேற்படிப்பிற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டியதை கருத்தில் கொண்டு, ஜே.இ.இ. மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகளை தள்ளி வைப்பது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

அதன்படி ஜே.இ.இ. பிரதான தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ந்தேதிக்கு இடையில் நடத்தப்படும். ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு செப்டம்பர் 27-ந்தேதியும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ந்தேதியும் நடத்தப்படும்’ என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web