ஜெயலலிதா… மறக்க முடியாத ஆளுமை!

இரும்புப் பெண்மணி, புரட்சித்தலைவி, அம்மா என்றெல்லாம் அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுகவை இன்னும் பலமான கட்சியாக மாற்றியவர். இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைக்க ஜெயலலிதாவே காரணம். எம்ஜிஆருக்குப் பின் அதிமுக என்ற கட்சியே காணாமல் போய்விடும் என்ற எதிர்பார்ப்பை உடைத்து, தனது தலைமையின் கீழ் சுமார் 28 ஆண்டுகள் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் ஜெயலலிதா. 1948-ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதானபோது அவரது
 

ஜெயலலிதா… மறக்க முடியாத ஆளுமை!ரும்புப் பெண்மணி, புரட்சித்தலைவி, அம்மா என்றெல்லாம் அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுகவை இன்னும் பலமான கட்சியாக மாற்றியவர்.  இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைக்க ஜெயலலிதாவே காரணம்.

எம்ஜிஆருக்குப் பின் அதிமுக என்ற கட்சியே காணாமல் போய்விடும் என்ற எதிர்பார்ப்பை உடைத்து, தனது தலைமையின் கீழ் சுமார் 28 ஆண்டுகள் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் ஜெயலலிதா.

1948-ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதானபோது அவரது தந்தை இறந்தார். அம்மா சந்தியாதான் எல்லாமாக இருந்தார். தனது பத்தாவது வயதில் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் சேர்க்கப்பட்டு அங்கு படித்தார். படிப்பில் சூட்டிகையான ஜெயலலிதா பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில்  இடம் பிடித்தார். அதோடு அவர் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

பதினைந்தாவது வயதில் திரைப்படத் துறைக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர் 127 படங்களில் நடித்த ஜெயலலிதா 1980-கள் வரை எம்ஜிஆர், சிவாஜி, ராஜ்குமார், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா என பல மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்தார்.

எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெயர் பெற்றார். தாயின் மறைவுக்குப் பிறகு எம்ஜிஆரின் ஆசியுடன் அதிமுகவில் இணைந்தார். 1982-ம் ஆண்டு அதிமுக உறுப்பினராக இருந்த ஜெயலலிதா 1983-ம் ஆண்டு அதன் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.

ஜெயலலிதா… மறக்க முடியாத ஆளுமை!

சத்துணவுத் திட்டத்தைக் கவனிக்கும் முதல் பொறுப்பை கொடுத்தார் எமஜிஆர். 1984-ல் ராஜ்யசபா உறுப்பினரானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளை சரளமாகப் பேசக்கூடியவர் என்பதால், அகில இந்தியா ஜெயலலிதா அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.

எம்ஜிஆர், 1984-ம் ஆண்டு  சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றார். அப்போது நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காகச் சூறாவளி பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் அதிமுகவில் ஏற்றத்தாழ்வுகளை ஜெயலலிதா சந்தித்து வந்தாலும் பொதுமக்களிடையே எம்ஜிஆருக்கு அடுத்து மிகப் பெரும் செல்வாக்கு கொண்டவர் ஜெயலலிதாதான் என்பது அழுத்தமாகப் பதிவானது.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட ஜெயலலிதா அவரது ஆதரவாளர்களுடன் கட்சியை கைப்பற்ற போராடினார். அதிமுக இரண்டாக பிளவுபட்டது.  இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்ட நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட சேவல் சின்னம் மூலம் 1989-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 27 இடங்களைக் கைப்பற்றினார் ஜெயலலிதா.

மற்றொரு அணியான ஜானகி அணி படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் அதிமுகவை வழிநடத்திச் செல்ல ஜெயலலிதா தகுதியானவர் என்பது உறுதியானது. மீண்டும் அதிமுகவை ஒன்றிணைத்து அதன் பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலலிதா.

எம்ஜிஆர் அதிமுகவை வழி நடத்தியது ஒரு வகை என்றால் ஜெயலலிதா வழி நடத்தியது முற்றிலும் வேறு விதம். கட்சியை ராணுவக் கட்டுப்பாட்டுடன் ஜெயலலிதா நடத்தினார். கட்சியில் ஒரே ஒருவர், அதிகாரம் மிக்கவர் ஜெயலலிதா மட்டுமே. கட்சியிலும் ஆட்சியிலும் ஜெயலலிதா சொன்னது மட்டுமே நடந்தது. இதனால் அதிமுகவில் அடுத்தகட்டத் தலைவர்கள் என்று யாரையும் குறிப்பிட முடியாத அளவிற்கு நிலைமை மாறியது.

தவறு யார் செய்தாலும், அவர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டனர்.

அரசியலில் 1991-ம் ஆண்டு ஜெயலலிதா மிகப்பெரும் வெற்றியைச் சந்தித்தார். ஆனால் 1996ம் ஆண்டு தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தார். பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கினார். அவருடன் இருந்தவர்கள் விலகி ஓடினர். ஆனாலும் மீண்டெழுந்து 2001-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

2001க்குப் பிறகு ஜெயலலிதா வின் அணுகுமுறையில் நிறையவே மாற்றங்கள். தான் கொண்டு வந்த மத மாற்ற தடைச் சட்டட்டத்தை விலக்கிக் கொண்டார்.

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என கூறி வெறுத்தார். ஈழப் போரில் மக்கள் கொல்லப்பட்டதை, ‘போர் என்றால் அதெல்லாம் சகஜம்தான்’ என்றவர், பின்னர் தனது பார்வையை மாற்றிக் கொண்டார்.  ஈழ தமிழர்களுக்கு தனிநாடு பெற்றுத்தருவேன் என சபதம் போட்டவர், சட்டமன்றத்தில் அதை தீர்மானமாகவே நிறைவேற்றி அதிர வைத்தார். ராஜிவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலையை வலியுறித்தியவர், மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை தானே விடுதலை செய்வதாகவும் அறிவித்தார். மத்திய அரசு பின்னர் அதற்கு முட்டுக்கட்டை போட்டது வேறு விஷயம்.

ஜெயலலிதா ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தினாலும் வாக்களிக்கும் மக்கள் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. பெண்கள் நலன், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் மெச்சத் தக்கதாகவே அமைந்தன. இவற்றிலெல்லாம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்கிறது என்றே சொல்லலாம்.

ஜெயலலிதா… மறக்க முடியாத ஆளுமை!

சாமானிய மக்களுக்கு ஜெயலலிதா கொண்டு வந்த பல திட்டங்கள் பயனளிக்கும் வகையில் அமைந்தன. கோவில்களில் அன்னதானம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு, மாடுகள், திருமண உதவித்திட்டங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். கல்வித்துறையில் காமராஜர், எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தான் சிறப்பான முன்னேற்றம் இருந்ததாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாநில நலன் சார்ந்த எந்த விஷயத்தையும் ஒரு முதல்வராக ஜெயலலிதா விட்டுக்கொடுத்ததே இல்லை. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டங்களிலும் அவர் சமரசம் செய்துக்கொண்டதே இல்லை. திமுக ஆட்சி காலத்தில் அனுமதிக்கப்பட்ட மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை அவர் கடுமையாக எதிர்த்தார். அவர் உயிரோடு இருந்தவரை இந்த திட்டங்களை தொடங்க அந்த நிறுவனங்கள் தயக்கம் காட்டியே வந்தன.

நீட் தேர்வு கூடவே கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார் ஜெயலலிதா. இந்த விஷயத்தில் அவரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தினறிக்கொண்டிருந்தார் மோடி என்பது தான் உண்மை. 2014ல் நாடு முழுக்க மோடி அலை வீசியது. ஆனால் தமிழகத்தில் “மோடி அலை அல்ல இந்த லேடி அலை தான்” என்று முழங்கினார் ஜெயலலிதா. அந்த தேர்தலில் 37 இடங்களில் வென்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையை அதிமுகவிற்கு பெற்றுத்தந்தார்.

நீட் தேர்வு, உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் எதேச்சதிகார திட்டடங்களை ஜெயலலிதா கடைசிவரை அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பேச தன்னை தேடி வந்த மத்திய அமைச்சர்களையும் சந்திக்க மறுத்த ஒரே முதல்வர் ஜெயலலிதா தான்.

காவேரி பிரச்னை, முல்லை பெரியாறு விவகாரம் போன்றவற்றில் தமிழகத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக நிலைநாட்டியவர் ஜெயலலிதா.

திமுக ஏதீர்ப்பு என்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் கடைசிவரை அந்தக் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலில், 2016 சட்டசபை தேர்தல் இரண்டிலும் ஜெயலலிதா கையாண்ட தேர்தல் உத்திகள், பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் சாணக்கியர் கருணாதியையே வாயடைக்க வைத்துவிட்டது. 2016 தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதா மக்களுக்காக பல நல்லத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்.

“எனக்கு குழந்தைகளோ, வாரிசுகளோ கிடையாது, இந்த தமிழ்நாட்டு மக்கள் தான் எனது வாரிசு. எனது சொத்துக்கள் அனைத்து இந்த மக்களுக்கே பயன்பட வேண்டும். என் கடைசி மூச்சு வரைக்கும் தமிழக மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன்,” என்று 2016 தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசினார்.

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு அவரை பெரும் மனஉளைச்சலுக்கும், உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாக்கியது. அதை தொடர்ந்து மர்மங்கள் விலகாத அவரது மரணம். அந்த மரணம் மட்டும் நேராமல் இருந்திருந்தால் ஜெயலலிதாவிடம் இருந்து ஒரு நல்ல ஆட்சி கிடைத்திருக்கக் கூடும்!

http://www.A1TamilNews.com

From around the web