ஒயிலாட்டம், பறையாட்டம், கபடிப் போட்டி.. அசத்தும் ஜப்பான் தமிழர்கள்!

ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கலை, பண்பாட்டு, உணவு மற்றும் விளைளையாட்டுத் திருவிழா நடைபெற்றது. ஜப்பானில் வசிக்கும் தமிழர்களும், இந்தியர்களும் மற்றும் ஜப்பானியர்களும் பெருந்திரளாக வந்திருந்து கண்டு களித்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பின்னர் ஜப்பானிய தாய்கோ, தமிழர்களின் பாரம்பரிய கும்மி, ஒயிலாட்டம், பறையாட்டம் என நடனங்களுடன் களை கட்டியது. சிறுவர்களுக்கான விளையாட்டுகளிலும் பெரியவர்களுக்கான கபடி, கோகோ, கோலப்போட்டி போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்தினார்கள். முதல் முறையாக சிறுவர்களுக்கான கபடி போட்டியும் நடைபெற்றது. சிறுவர்கள்
 

ஒயிலாட்டம், பறையாட்டம், கபடிப் போட்டி.. அசத்தும் ஜப்பான் தமிழர்கள்!ப்பான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கலை, பண்பாட்டு, உணவு மற்றும் விளைளையாட்டுத் திருவிழா நடைபெற்றது. ஜப்பானில் வசிக்கும் தமிழர்களும், இந்தியர்களும் மற்றும் ஜப்பானியர்களும் பெருந்திரளாக வந்திருந்து கண்டு களித்துள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பின்னர் ஜப்பானிய தாய்கோ, தமிழர்களின் பாரம்பரிய கும்மி, ஒயிலாட்டம், பறையாட்டம் என நடனங்களுடன் களை கட்டியது. சிறுவர்களுக்கான விளையாட்டுகளிலும் பெரியவர்களுக்கான கபடி, கோகோ, கோலப்போட்டி போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்தினார்கள். ஒயிலாட்டம், பறையாட்டம், கபடிப் போட்டி.. அசத்தும் ஜப்பான் தமிழர்கள்!

முதல் முறையாக சிறுவர்களுக்கான கபடி போட்டியும் நடைபெற்றது. சிறுவர்கள் உற்சாகத்துடன் கபடி கபடி என்று ஆடிய போது, அடுத்த தலைமுறையிலும் நம் பாரம்பரியமும் பண்பாடும் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மேலும் சிறுவர் சிறுமியர்களுக்கு நம் பாரம்பரிய விளையாட்டுக்களான பல்லாங்குழி, தாயம்,ஆடுபுலி ஆட்டம் போன்ற விளையாட்டுகளும் சொல்லித்தரப்பட்டது.

இந்த ஆண்டும் தமிழர் குடில் கலைமையமும் சிறப்பானமுறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்குடிலில் கீழடி குறித்த படங்கள் மற்றும் தமிழ்நாட்டைக் கண்முன் கொண்டு வரும் வகையில் வீடுகள், இசைக்கருவிகள், விளையாட்டுக்கள் குறித்த பல்வேறு படங்கள், மற்றும் தமிழறிஞர்கள், தமிழ் ஆளுமைகளின் படங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஜப்பானியர்களும் மிகவும் ஆர்வத்துடன்  கண்டுகளித்தனர்.ஒயிலாட்டம், பறையாட்டம், கபடிப் போட்டி.. அசத்தும் ஜப்பான் தமிழர்கள்!

விழாவின் முத்தாய்ப்பாக தமிழர் பாரம்பரிய திண்பண்டங்களை ஜப்பானில் அறிமுகப்படுத்தும் வகையிலும், அடுத்த தலைமுறையினர் அவைகளை உண்பதை ஊக்குவிக்கும்பொருட்டும் இல்லதரசிகளுக்காக நடத்தப்பட்ட “திண்பண்டங்கள் சமையல் போட்டி” அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஜப்பான் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் தன்னார்வலர்களும் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்து இருந்தார்கள். ஜப்பானில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், தமிழர் பாரம்பரியத்தை ஜப்பானியர்களுக்கு பறைசாற்றும் வகையிலும் ஜப்பான் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது.

A1TamilNews.com

From around the web