பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது! மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் `மன் கி பாத் ’ நிகழ்ச்சியில் இனி வரும் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். பிரதமர் உரையில் இந்தியா இதுவரை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி அடைந்து வந்திருக்கிறது. இன்னமும் அரசாங்க நெறிமுறைகளை கருத்தில் கொண்டு செயல்பட்டால் நாம் சிறப்பான முன்னேற்றம் அடையலாம். அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா கொரோனாவால் பெரிய அளவில்
 

பொதுமக்கள்  கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது!  மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் `மன் கி பாத் ’ நிகழ்ச்சியில் இனி வரும் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் உரையில் இந்தியா இதுவரை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி அடைந்து வந்திருக்கிறது. இன்னமும் அரசாங்க நெறிமுறைகளை கருத்தில் கொண்டு செயல்பட்டால் நாம் சிறப்பான முன்னேற்றம் அடையலாம்.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்ற உலக நாடுகளின் எண்ணத்தை நம் ஒற்றுமையால் மாற்றிக் காட்டியிருக்கிறோம்.

பொருளாதார அளவில் மிகவும் பாதிப்படைந்து இருந்தாலும் விரைவில் மீண்டெழுவோம். மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகின்றது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. பொது வெளிகளில் நடமாடும் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து பாதுகாப்புடன் செயல்பட்டால் தான் முழுமையான வெற்றியினை அடைய முடியும் என பிரதமர் மோடி தமது மன் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

A1TamilNews.com

From around the web