நான்கு பேரை கொலை செய்த ஐடி ஊழியர்.. அமெரிக்காவில் பயங்கரம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் 4 பேரை தொடர்ச்சியாக கொலை செய்த ஐடி ஊழியர் போலீசாரிடம் சரணடைந்துள்ளார். வடக்கு கலிஃபோர்னியாவின் ஷாஷ்டா நகர போலீஸ் நிலையத்தில், காரின் பின் சீட்டில் கொலை செய்யப்பட்ட ஒருவருடன் வந்து சரணடைந்தார் சங்கர் ஹங்குட் என்ற அமெரிக்க இந்தியர். விசாரித்ததில் மேலும் மூன்று பேரை ராஸ்வில் நகரிலுள்ள அபார்ட்மெண்டில் கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த போலீசார் ராஸ்வில் நகர போலீசாருடன் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கே மூன்று பேர்
 

நான்கு பேரை கொலை செய்த ஐடி ஊழியர்.. அமெரிக்காவில் பயங்கரம்!மெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் 4 பேரை தொடர்ச்சியாக கொலை செய்த ஐடி ஊழியர் போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

வடக்கு கலிஃபோர்னியாவின் ஷாஷ்டா நகர போலீஸ் நிலையத்தில், காரின் பின் சீட்டில் கொலை செய்யப்பட்ட ஒருவருடன் வந்து சரணடைந்தார் சங்கர் ஹங்குட் என்ற அமெரிக்க இந்தியர். விசாரித்ததில் மேலும் மூன்று பேரை ராஸ்வில் நகரிலுள்ள அபார்ட்மெண்டில் கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த போலீசார் ராஸ்வில் நகர போலீசாருடன் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கே மூன்று பேர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். கைது செய்யப்பட்ட சங்கர் ஹங்குட் பிளேசர் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 4 கொலைக் குற்றங்களுக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனக்கு வழக்கறிஞர் யாரும் தேவையில்லை என்று நீதிபதியிடம் சொல்லியிருக்கிறார் சங்கர் ஹங்குட். பின்னர் தன்னுடைய சார்பில் ஒருவரை வாதாடுவதற்கு அமர்த்திக் கொள்ள இசைந்துள்ளார்.

நீதிமன்ற தகவல்களின் படி ஒரு வார இடைவெளியில் இந்தக் கொலைகளை அவர் செய்துள்ளதாகத் தெரிகிறது. அக்டோபர் 7ம் தேதி ராஸ்வில் அபார்ட்மெண்டில் முதல் இரண்டு கொலைகளைச் செய்துள்ளார். அடுத்த நாள் அதே இடத்தில் மற்றொரு கொலையைச் செய்துள்ளார். நான்காவது நபரை காரில் ஏற்றிக் கொண்டு கலிஃபோரினியாவின் வடக்குப் பகுதிகளில் சுற்றித் திரிந்து கடைசியில் கொலை செய்து, காரின் பின் இருக்கையில் வைத்துக் கொண்டு வந்து போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

கொலைக்கான காரணம் தெரியவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட வில்லை. இந்திய தூதரகத்தின் மூலம் இறந்தவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்தக் கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சங்கர் ஹங்குட்டின் லிங்ட்இன் ப்ரொபைலில், டேட்ட ஆர்கிடெக்ட் வேலை பார்ப்பதாகவும் , பீனிக்ஸ் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. படித்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

 

From around the web