10% ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் செயல்படலாம்!தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக அனைத்து தொழிற்சாலைகள் ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பரவல் குறைந்த பகுதிகளில் சென்னையில் 10 சதவீத பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. ஐடி நிறுவனங்களின் பணியாளர்களுக்கான வாகன சேவையை அந்தந்த நிறுவனங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்தான் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் அதிகபட்சம் 10
 

10% ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள் செயல்படலாம்!தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக அனைத்து தொழிற்சாலைகள் ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

பரவல் குறைந்த பகுதிகளில் சென்னையில் 10 சதவீத பணியாளர்களுடன் ஐடி நிறுவனங்கள் இயங்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. ஐடி நிறுவனங்களின் பணியாளர்களுக்கான வாகன சேவையை அந்தந்த நிறுவனங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில்தான் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம் என்றும் பணியிடங்களிலும், பயணங்களின் போதும் ஊழியர்கள் முகக்கவசம் அணிய நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

A1TamilNews.com

From around the web