இஸ்ரோ புதிய சாதனை : 29 சாட்லைட்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் எமிசாட் மற்று 28 வெளிநாட்டு சாட்லைட்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பறந்தது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி- சி45 ராக்கெட். முன்னதாக, 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட் 104 சாட்லைட்களை ஒரே நேரத்தில் சுமந்து சென்று விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஒரே சுற்றுப் பாதையில் செலுத்தப்பட்டது. திங்கட்கிழமை பிஎஸ்எல்வி-சி45 மூலம் அனுப்பப்பட்ட 28 சாட்லைட்களும் மூன்று வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது இஸ்ரோவுக்கு மிகப்பெரும் சாதனையாகும்.
 

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் எமிசாட் மற்று 28 வெளிநாட்டு சாட்லைட்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பறந்தது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி- சி45 ராக்கெட்.
 
முன்னதாக, 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட் 104 சாட்லைட்களை ஒரே நேரத்தில் சுமந்து சென்று விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஒரே சுற்றுப் பாதையில் செலுத்தப்பட்டது. 
 
திங்கட்கிழமை பிஎஸ்எல்வி-சி45 மூலம் அனுப்பப்பட்ட 28 சாட்லைட்களும் மூன்று வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது இஸ்ரோவுக்கு மிகப்பெரும் சாதனையாகும். மேலும் நான்காவது கட்டத்தில் உள்ள ராக்கெட்டின் கடைசிப் பகுதியும் சாட்லைட் போல் சில வாரங்கள் அல்லது மாதங்கள் செயல்படும். முன்னதாக அனுப்பபட்ட ராக்கெட்களில் இத்தகைய கூடுதல் அம்சங்கள் கிடையாது.
 
28 வெளிநாட்டு சாட்லைட்களில் அமெரிக்கா 24   லிதுயேனியா 2 ,  சுவிட்சர்லாந்து 1 ஸ்பென் 1 ஆகும். உடன் ராணுவ ஆராய்ச்சி அமைப்பு (DRDO)வுக்காக இந்தியாவின் எமிசாட் சாட்லைட்டும் விண்ணில் செலுத்தப் பட்டுள்ளது. எமிசாட் ஒரு கண்காணிப்பு சாட்லைட் ஆகும். ராணுவ ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
 

From around the web